News October 9, 2025

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய வீரர்கள் முன்னேற்றம்

image

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 5 இந்திய வீரர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்டில் 7 விக்கெட் வீழ்த்திய சிராஜ் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடம் பிடித்துள்ளார். குல்தீப் யாதவ் 7 இடங்கள் முன்னேறி 21-வது இடம் பிடித்துள்ளார். பேட்டிங்கில் ஜடேஜா 25-வது இடத்திற்கும், கே.எல்.ராகுல் 35-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். ஆல்ரவுண்டர்களில் வாஷிங்டன் சுந்தர் 11-வது இடம் பிடித்துள்ளார்.

Similar News

News October 9, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: காலமறிதல் ▶குறள் எண்: 483 ▶குறள்: அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். ▶பொருள்: செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?.

News October 9, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் 646 காலிபணியிடங்கள்

image

மத்திய அரசின் CDAC நிறுவனத்தில் காலியாக உள்ள 646 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. புராஜக்ட் இன்ஜினியர், புராஜக்ட் சப்போர்ட், புராஜக்ட் மேனேஜர் ஆகிய பணியிடங்களுக்கு careers.cdac.in என்ற தளத்தில் வரும் 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். கல்வித்தகுதி : BE/ BTech/ MCA முடித்திருக்க வேண்டும். பணியிடங்களுக்கு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.

News October 9, 2025

திமுக ஆட்சியில் தடையின்றி கஞ்சா விற்பனை: EPS

image

திமுக ஆட்சியில் போதைப் பொருள் புழக்கம் அதிகமாக உள்ளது என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை கஞ்சா தங்கி தடையின்றி கிடைப்பதாகவும், அதற்கு திமுக நிர்வாகிகள் ஆதரவாக இருப்பதால் அதன் விற்பனையை போலீசால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கஞ்சா விற்பனை முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!