News April 14, 2025
AFG வீராங்கனைகளுக்கு உதவ களமிறங்கிய ICC

ஆஃப்கானிஸ்தான் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு உதவ ICC முன்வந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்துள்ள 21 வீராங்கனைகளுக்கு உதவ சிறப்பு நிதி ஒதுக்கப்படும் எனவும், உலகத்தரத்திலான கோச்சிங் வழங்கப்படும் எனவும் ICC தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ஆஃப்கானிஸ்தானில் 2021-ல் தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததும், அந்நாட்டு கிரிக்கெட் வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்தனர்.
Similar News
News September 18, 2025
இலவச பயிற்சியுடன் வேலை: உடனே விண்ணப்பிங்க

கம்யூட்டர் சார்ந்த படிப்பு படித்தவர்களுக்கு இலவச பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்புகளை தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டம் வழங்குகிறது. ServiceNow Developer, Salesforce Developer ஆகிய 2 சான்றிதழ் படிப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகள் கோவை KPR பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. ServiceNow Developer பயிற்சிக்கு இந்த <
News September 18, 2025
BREAKING: மீண்டும் கூட்டணியில் OPS, TTV?

NDA கூட்டணியில் OPS, TTV, சசிகலா இணைவார்களா என்ற கேள்விக்கு EPS நேரடியாக பதிலளிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். அரசியல் சூழ்நிலைக்கு தகுந்தவாறு பெரிய கட்சிகள் கூட்டணி அமைப்பது இயல்பான ஒன்றுதான்; கூட்டணி, உள்கட்சி விவகாரம் குறித்து நாங்கள் பேசி முடிவு எடுத்துக்கொள்வோம் என்று நேரடியாக இல்லாமல் சூசகமாக பதிலளித்தார். இதனால், OPS, TTV மீண்டும் கூட்டணியில் இணைய வாய்ப்பா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News September 18, 2025
சீன மாஸ்டர்ஸ்: காலிறுதியில் பி.வி.சிந்து

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார். 6-ம் நிலையில் உள்ள தாய்லாந்தின் போர்ன்பாவி சோச்சுவாங்கை எதிர்கொண்ட அவர், 21 – 15, 21 -15 என்ற கணக்கில் வெற்றியடைந்தார். சமீபகாலமாக பெரிய வெற்றியை பெறாமல் உள்ள சிந்து, இந்த தொடரில் தடம் பதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் போராடி வருகிறார்.