News October 21, 2025
பருவமழையை எதிர்கொள்ள IAS அதிகாரிகள் நியமனம்

TN-ல் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தும் விதமாக கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு IAS அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தத்தமது மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு செய்து, நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க CM அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News January 18, 2026
அதிமுக கூட்டணியில் விஜய்? முடிவை சொன்னார்

புதுக்கட்சி ஒன்று விரைவில் NDA கூட்டணிக்கு வரும் என EPS கூறி வருகிறார், அது தவெக என்றால் சந்தோஷம் என பாஜக மாநில துணைத் தலைவர் பால் கனகராஜ் கூறியுள்ளார். அதேநேரம், NDA கூட்டணியின் CM வேட்பாளர் EPS தான் என தெளிவாக அறிவித்து விட்டோம்; அதனால் CM வேட்பாளர் நான் தான் எனக்கூறும் விஜய்யுடன் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை என்றும் கூட்டணி குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.
News January 18, 2026
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இன்றே கடைசி

தமிழகத்தில் 2025 நவம்பர் 4-ம் தேதி SIR பணிகளை ECI தொடங்கியது. கடந்த டிசம்பர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இடம்பெறாத வாக்காளர்கள் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க ஜனவரி 18-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இதுவரை பட்டியலில் பெயரை சேர்க்க சுமார் 18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17-ம் தேதி வெளியாகும்.
News January 18, 2026
ஓபிஎஸ், சசிகலாவை விமர்சித்த புகழேந்தி

முதலமைச்சர் பதவி கொடுத்த சசிகலா மற்றும் ஓபிஎஸ் ஏன் EPS-யிடம் தைரியமான கேள்வி கேட்காமல் ஒதுங்கி செல்கின்றனர் என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழு நிர்வாகி புகழேந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ஓசூரில் பேசிய அவர், தனது நிலைப்பாடு குறித்து 10 நாட்களில் அறிவிப்பேன் என்று தெரிவித்தார். மேலும், அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரை யார் கொண்டாடுகிறார்களோ அவர்களை கொண்டாடுவோம் என்று கூறினார்.


