News March 5, 2025
நான் தலையிடமாட்டேன்… ருதுராஜ்-க்கு தோனி அட்வைஸ்!

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் – தோனி இடையேயான நட்பு அனைவரும் அறிந்ததே. கடந்தாண்டு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது தொடர்பாக ருதுராஜ் நெகிழ்ந்து பேசியுள்ளார். “இது உன்னுடைய அணி, உனது முடிவில் நான் தலையிட மாட்டேன்” என ருதுராஜ்-க்கு தோனி அறிவுறுத்தி உள்ளார். எனது அறிவுரையை கேட்க வேண்டும் என கட்டாயமில்லை எனவும் தோனி தெரிவித்ததாக ருதுராஜ் கூறியுள்ளார்.
Similar News
News November 17, 2025
சவுதி அரேபியா விபத்து: ஒருவர் மட்டும் உயிர் பிழைத்த அதிசயம்

சவுதி அரேபியா பேருந்து விபத்தில் <<18308684>>42 பேர்<<>> உயிரிழந்தனர். ஆனால் இதில், அதிர்ஷ்டவசமாக முகமது அப்துல் சோயிப் என்ற ஓட்டுநர் மட்டும் உயிர்பிழைத்துள்ளார். இக்கட்டான நிலையில், அவர் சிகிச்சையில் உள்ளார். இப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்த அதேநேரம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும், மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Sad..
News November 17, 2025
BREAKING: ஷேக் ஹசீனா குற்றவாளி: தீர்ப்பு வெளியானது

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) தீர்ப்பளித்துள்ளது. தற்போது நீதிபதி தீர்ப்பை வாசித்து வருகிறார். விரைவில் தண்டனை என்னவென்று தெரியவரும். ஹசீனா ஆட்சியில், கடந்த ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தை ஒடுக்க அவர் கடும் வன்முறையை கையாண்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஹசீனா மற்றும் 2 உயர் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
News November 17, 2025
எதிர்காலத்தை கணித்தவர் காலமானார்

அமெரிக்காவின் பிரபலமான The Simpsons கார்ட்டூனை பலர் பார்த்திருப்பீர்கள். எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்னதாகவே கணித்து அதனை கார்ட்டூனாக காட்சிபடுத்துவதில்தான் இந்த தொடர் பேமஸ். இந்நிலையில் இந்த கார்ட்டூனை எழுதிய டான் மெக்ராத் (61) பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். 1997-ல் ‘The Simpsons’ தொடரின் ‘Homer’s Phobia’ எபிசோடுக்காக இவருக்கு Emmy விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.


