News July 5, 2025
என் வீட்டிற்கு வந்தால் ஸ்டாலினை வரவேற்பேன்: EPS

‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பை தொடங்கிவைத்த ஸ்டாலினிடம் ‘இபிஎஸ் வீட்டிற்கு செல்வீர்களா’ என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு நிச்சயம் செல்வன் என்று பதிலளித்தார். இன்று இதுகுறித்து இபிஎஸ்ஸிடமும் செய்தியாளர்கள் இதே கேள்வியை எழுப்பினர். அதற்கு, என் வீட்டிற்கு வந்தால் ஸ்டாலினை வரவேற்பேன் என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
Similar News
News July 5, 2025
தூத்துக்குடியை தொடர்ந்து சோளிங்கரிலும் விடுமுறை!

ஜூலை 7-ம் தேதி திங்கள்கிழமை அன்று <<16943415>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. யோக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
News July 5, 2025
‘MSME நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்க’

50 கிலோ வாட் வரை கட்டண உயர்வில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் குறு நிறுவனங்கள் 120 கிலோ வாட் வரை பயன்படுத்துவதால் இந்த அறிவிப்பு உதவாது என தமிழ்நாடு தொழில் அமைப்புகள் தெரிவித்தன. கோவையில் பேட்டியளித்த இந்த அமைப்பினர், MSME நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், சூரிய மின்சக்தி பயன்படுத்துவோருக்கு விதிக்கப்படும் கட்டணத்தையும் நீக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
News July 5, 2025
இரவு 10 மணிக்கு மேல் கரண்ட் கட்… ஏன் தெரியுமா?

ரஷ்யாவில் நாளுக்கு நாள் மக்கள்தொகை குறைந்து வருவதால், அதை தடுக்க வித்தியாசமான யோசனைகள் முன்வைத்துள்ளது அதன் ‘பாலியல் அமைச்சகம்’. அதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை வீடுகளுக்கான மின்சாரத்தையும், இன்டர்நெட் இணைப்பையும் கட் செய்ய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதனால், தம்பதியினர் உறவில் ஈடுபட வாய்ப்பு அதிகரிக்கும், குழந்தை பிறப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எப்படி இருக்கு?