News April 18, 2025

பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன்: அனுராக் காஷ்யப்

image

ஜோதிராவ் & சாவித்ரிபாய் பூலே குறித்து உருவாகியிருக்கும் பாலிவுட் படமான ‘பூலே’வுக்கு CBFC கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்த அனுராக் காஷ்யப், CBFCயில் இருக்கும் பிராமணர்களை கடுமையாக சாடியிருந்தார். அதில் ஒருவர், பிராமணர்கள் உங்களை விட மேல் என்று கமெண்ட் செய்ய, கடுப்பான காஷ்யப், நான் பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன் என்று கமெண்ட் செய்தார்.

Similar News

News December 4, 2025

விழுப்புரம்: மகளிருக்கு ரூ.10 லட்சம் கடன் – ஆட்சியர் அறிவிப்பு!

image

தமிழக அரசின் மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின்படி, மகளிர் மற்றும் திருநங்கையர்கள் தொழில் துவங்கிட, ரூ.10 லட்சம் வரை பிணையில்லா வங்கிக் கடன் வழங்கப்படுகிறது. இத்தொகையில், 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 2 லட்சம், அரசு மானிய உதவி வழங்கப்படும். தொழில்முனைவோராக ஆர்வமுள்ள மகளிர் மற்றும் திருநங்கையர்களுக்கு மேம்பட்ட பயிற்சி அளிப்பக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News December 4, 2025

13 ஆண்டுகளுக்கு பிறகு..

image

சையது முஷ்டாக் அலி தொடரின், Knock- Out சுற்றில் விளையாட ரோஹித் விருப்பம் தெரிவித்துள்ளாராம். அவர் கடைசியாக 2011-12 சீசனில் மும்பை அணிக்காக இத்தொடரில் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2027 ODI WC-ல் விளையாட உடற்தகுதி & ஃபார்மை தக்கவைத்துக் கொள்ள, உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என ரோஹித் & கோலியிடம் BCCI அறிவுறுத்திய நிலையில், இருவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.

News December 4, 2025

உங்க ஊரில் வேலை வேணுமா? Way2News-ல் பாருங்கள்!

image

Way2News ஆப், புதிதாக உள்ளூர் வேலைவாய்ப்புகள் பிரிவை அறிமுகம் செய்துள்ளது. இதில் உங்கள் ஊரில் உள்ள தொழிற்சாலை, அலுவலக, திறன்சார்ந்த மற்றும் டெலிவரி பாய் உள்பட அனைத்து வகை வேலைவாய்ப்புகளையும் தெரிந்துகொள்ளலாம். தகவல்கள் முழுவதும் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்டே வழங்கப்படுகின்றன. உங்களுக்கு அருகில் உள்ள வேலைவாய்ப்புகளை அறிய Way2News app-ல் உள்ள Jobs பிரிவில் பார்த்து பயனடையுங்கள்.

error: Content is protected !!