News April 16, 2024
₹200, ₹300, ₹500 கொடுத்து அசிங்கப்படுத்த மாட்டேன்

தேனி மக்களை விலைக்கு வாங்க முடியாது என டிடிவி தினகரன் உறுதியளித்தார். மக்களவைத் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் போடிநாயக்கனூரில் பேசிய தினகரன், “₹200, ₹300, ₹500 பணம் கொடுத்து உறவினர்களை அசிங்கப்படுத்த நினைக்கவில்லை. தான் வெற்றிபெற்றால் தேனி தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாக” உறுதியளித்துள்ளார்.
Similar News
News August 15, 2025
கவர்னர் மாளிகையில் சுதந்திர தினக் கொண்டாட்டம்

நாட்டின் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கிண்டி ராஜ்பவனில் கவர்னர் R.N.ரவி மூவர்ணக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு வந்திருந்த குழந்தைகள் உள்பட பலருக்கும் அவர் இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து, காந்தி நினைவிடத்திற்குச் சென்று பூங்கொத்து வைத்து மரியாதை செலுத்தினார். <<-se>>#HappyIndependenceday<<>>
News August 15, 2025
‘கூலி’ OTT ரிலீஸ் அப்டேட்!

ரஜினி- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஆரவாரமாக வெளிவந்துள்ள ‘கூலி’ திரைப்படம் <<17409522>>வசூலில் <<>>பட்டையை கிளப்பி வருகிறது. படத்திற்கு ‘A’ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளதால், ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டருக்கு வர முடியாத நிலை உள்ளது. அவர்கள் படத்தின் OTT உரிமத்தை அமேசான் பிரைம் கைப்பற்றியுள்ள நிலையில், படம்
செப்டம்பரில் முதல் வாரத்தில் OTT-ல் வெளியாகும் என கூறப்படுகிறது. நீங்க படத்தை எதில் பார்க்க போறீங்க?
News August 15, 2025
Made in India சோஷியல் மீடியாக்கள்: மோடி அழைப்பு

‘தற்சார்பு இந்தியா’ என்பதே மோடியின் சுதந்திர தின உரையின் சாராம்சமாக இருந்தது. குறிப்பாக, வலுவான சோஷியல் மீடியா தளங்களை உருவாக்க இந்திய இளைஞர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், இன்ஸ்டா போன்ற வெளிநாட்டு App-களையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். அதேநேரம், ShareChat, Moj, Koo போன்ற Made in India தளங்களின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?