News April 4, 2025
டெல்லிக்கு செல்ல மாட்டேன்: அண்ணாமலை

தமிழக பாஜக தலைவருக்கான தேர்தல் போட்டியில் தான் இல்லையென்று அறிவித்திருக்கும் அண்ணாமலை, டெல்லி அரசியலுக்கு போக மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். அடுத்த தலைவருக்காக தான் யாரையும் கைகாட்டவில்லை என்றும் பாஜக நன்றாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே விரும்புவதாகவும் கூறியுள்ளார். அதிமுக குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
Similar News
News December 9, 2025
‘பாசிச திமுக’ அரசின் முயற்சி முறியடிக்கப்படும்: நயினார்

நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்., கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என்று நயினார் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாட்டு உரிமையை நிலைநாட்டிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக பதவிநீக்க தீர்மானம் கொண்டுவர இண்டியா கூட்டணியின் MP-க்கள் முன்னெடுத்திருப்பது வெட்கக்கேடானது எனக் கூறிய அவர், வழிபாட்டு உரிமையை முடக்க நினைக்கும் பாசிச திமுக அரசின் முயற்சி முறியடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
News December 9, 2025
நாளை முதல் அரையாண்டு தேர்வு.. மாணவர்களே ரெடியா!

தமிழகத்தில் நாளை(டிச.10) முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்கவுள்ளன. 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு நாளை தேர்வுகள் நடக்க உள்ளன. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிச.15-ல் தேர்வுகள் தொடங்கும். டிச.23-ல் தேர்வுகள் நிறைவடைகின்றன. மாணவர்களே, *படிப்பதற்கு தேவையான நேரம் ஒதுக்குங்கள். *இரவில் நீண்ட நேரம் கண்விழித்து படிப்பதை தவிருங்கள். *பதற்றமின்றி தேர்வுகளை எழுதுங்கள். ALL THE BEST
News December 9, 2025
நாதகவில் இருந்து விலகல்.. புதிய கட்சி உதயம்

நாதக ராமநாதபுரம் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கியுள்ளனர். மாவட்டச் செயலாளராக இருந்த கண்.இளங்கோ தலைமையில் ‘மேதகு நாம் தமிழர் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது. திராவிட கட்சிகளுக்கு எதிராக நாதக செயல்படவில்லை என குற்றஞ்சாட்டிய கண்.இளங்கோ, வெறுமனே பேசினால் மட்டுமே ஆட்சியை பிடித்துவிடலாம் என நாதக தலைமை நம்புகிறது என சாடியுள்ளார்.


