News May 24, 2024

நான் உயிருடன் இருக்கும் இதை அனுமதிக்க மாட்டேன்: மோடி

image

INDIA கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு இந்தியாவை விட தங்கள் வாக்கு வங்கிதான் முக்கியம் என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். பிவானியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “நான் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்கான காவலாளியாக இருப்பேன். இது அரசியல் பேச்சு அல்ல, எனது வாக்குறுதி. நான் உயிருடன் இருக்கும் வரை தலித், பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது” எனக் கூறினார்.

Similar News

News March 6, 2026

இந்தியாவுக்கு அனுமதி வழங்க USA யார்? ஜோதிமணி

image

இந்தியா யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும், எவ்வளவு காலம் வாங்கவேண்டும் என்பதை ஆணையிட அமெரிக்கா யார் என ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது நிறுத்தப்பட வேண்டும் என்ற அவர், இதற்கு PM மோடி மக்களுக்கும் நாடாளுமன்றத்திலும் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், டிரம்ப் மீதான மோடியின் குருட்டுத்தனமான மரியாதையால் ஏற்கனவே இந்தியா பெரும் விலையை கொடுத்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 6, 2026

சனிப்பெயர்ச்சி: நற்பலன்கள் பெற பொதுவான பரிகாரங்கள்

image

சனிப்பெயர்ச்சி பரிகாரம்: *தினசரி விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு நல்ல பலன் தரும். *விநாயகர் அகவல், ஹனுமான் சாலீசா, சுந்தரகாண்டம் பாராயணம் ஆகியவற்றை தினமும் மேற்கொள்ளலாம். *அவ்வப்போது கணபதி ஹோமம் (அ) பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமம் செய்யலாம். *தினமும் முன்னோர்கள் வழிபாடு செய்வது (குறைந்தபட்சம் அமாவாசை தினத்தன்றாவது). *தினமும் காகத்திற்கு சாதம் வைப்பதும் சிறந்த பரிகாரமாகும் என்கின்றனர் நம்பிக்கையுள்ளோர்.

News March 6, 2026

மீண்டும் போடியில் OPS போட்டியா?

image

தேனி போடிநாயக்கனூரில் OPS போட்டியிட, மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு பெற்றார். அத்துடன் போடி, கம்பம் (அ) ஆண்டிபட்டியில் தான் போட்டியிடவும் அவர் விருப்பமனு பெற்றுள்ளார். 2021-ல் தேனியில் 3 தொகுதிகளில் திமுக வென்றபோதும், போடியில் OPS வென்றார். தன்னுடைய சமூக மக்கள், உறவினர் அதிகமிருக்கும் பகுதி என்பதால், இம்முறை திமுக சார்பாக போட்டியிட்டாலும் OPS வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!