News June 27, 2024
கடனை அடைத்தால் புதிய படம் தயாரிப்பேன்

‘லாபம்’ திரைப்படத்தால் ஏற்பட்ட கடனை அடைத்துவிட்டு, அடுத்த படத்தை தயாரிப்பேன் என்று நடிகர் விஜய் சேதுபதி சீரியஸாக கூறியுள்ளார். ஆரஞ்சு மிட்டாய், மேற்குத் தொடர்ச்சி மலை போன்ற படங்களை மீண்டும் நீங்கள் தயாரிக்க வாய்ப்புள்ளதாக என பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இதுவரை தயாரித்த படங்களில் நல்ல அனுபவமே கிடைக்கவில்லை. கடனாளியாக மட்டுமே ஆகியிருக்கிறேன்” என்றார்.
Similar News
News December 10, 2025
சற்றுமுன்: அதிமுக பொதுக்குழுவில் ரத்த காயம்

சென்னை வானகரத்தில் நடக்கும் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க சென்ற EPS-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அனுமதி கடிதம் இல்லாதவர்களும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால், அடுத்தடுத்து பலர் கீழே விழுந்த நிலையில், ஒருவர் மீது ஒருவர் ஏறி மிதித்ததால் சிலருக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News December 10, 2025
அகிலம் ஆராதிக்க அரசன்.. (PHOTOS)

அடுத்தடுத்த தடங்கலுக்கு பிறகு, ‘அரசன்’ படத்தின் ஷூட்டிங் கோவில்பட்டியில் நேற்று தொடங்கியது. இதன் Exclusive ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸை பகிர்ந்துள்ள தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, ‘அகிலம் ஆராதிக்க அரசன் ஆனந்த பவனி’ என கேப்ஷன் கொடுத்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
News December 10, 2025
ஒரே நாளில் விலை ₹8,000 உயர்ந்தது… புதிய RECORD

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹8 உயர்ந்து ₹207-க்கும், கிலோ வெள்ளி ₹8,000 உயர்ந்து ₹2,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அக்.15-ல் புதிய உச்சத்தை தொட்ட வெள்ளி விலை, பின் படிப்படியாக குறைந்தது. அதன்பின் சர்வதேச சந்தை எதிரொலியால் மீண்டும் விலை அதிகரித்த நிலையில், இன்று ஒரே நாளில் ₹8,000 உயர்ந்துள்ளது.


