News August 6, 2025
டிரம்புக்கு பதில் மோடியை அழைப்பேன்: பிரேசில் அதிபர்

சமீபத்தில் பிரேசில் பொருட்கள் மீது 50% வரி விதித்தார் டிரம்ப். இந்நிலையில் இதுதொடர்பாக விவாதிக்க பிரேசில் அதிபர் எப்போது வேண்டுமானாலும் தன்னை அழைக்கலாம் என டிரம்ப் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பிரேசில் அதிபர் லுலா டா சில்வா, தான் டிரம்பை அழைத்து இதுபற்றி பேசபோவதில்லை என்றும், அதற்கு மாற்றாக PM மோடி, சீனா அதிபர் ஜி ஜின் பங்கை அழைத்து பேசுவேன் என தெரிவித்துள்ளார்.
Similar News
News August 6, 2025
10 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதேபோல், அரியலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையாக குடையை கூடவே எடுத்துக்கிட்டு போங்க மக்களே..!
News August 6, 2025
ஒரு ரூபாய் செலவில்லை… இலவச மருத்துவ ஆலோசனை

மத்திய அரசின் தொலைதூர மருத்துவ சேவை தான் இ-சஞ்சீவனி (esanjeevani.in) திட்டம். இதன்மூலம், நாட்டின் எந்த மூலையில் இருந்தும் தொலைபேசி / வீடியோ கால் அழைப்பு மூலம் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உடல்நிலை மற்றும் சிகிச்சைகள் பற்றி டாக்டரிடம் ஆலோசனை பெறலாம். ஆலோசனையுடன் டாக்டர் இ-பிரிஸ்கிரிப்ஷனும் கொடுப்பார். இதை பார்மஸியில் காட்டி மருந்துகளும் வாங்கலாம். ஆயுர்வேத டாக்டர்களிடமும் ஆலோசனை பெறலாம்.
News August 6, 2025
அன்புமணிக்கு எதிராக வழக்கு தொடுத்த ராமதாஸ்

பாமக பொதுக்குழு கூட்டம் ஆக. 17-ம் தேதி நடைபெறும் என ராமதாஸ் தரப்பிலும், ஆக.9-ம் தேதி நடைபெறும் என அன்புமணி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதனால் பாமக தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தன்னைத்தானே தலைவர் என கூறிக்கொண்டு அன்புமணி செயல்படுவதாகவும், ஆகையால் அவர் கூட்டும் பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க வேண்டுமென ராமதாஸ் தரப்பில் சென்னை HC-ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.