News September 11, 2025
விஷால் கல்யாணம் முடிஞ்சா தான் எனக்கு கல்யாணம்..!

நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், நடிகர் விஷால் திருமணம் இந்தாண்டே நடக்கும் என அவரது பெற்றோர் கூறியுள்ளனர். இதனிடையே, பேச்சிலராக இருக்கும் அதர்வா விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என விஷால் குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, விஷால் சார் எப்போது தாலி கட்டுகிறாரோ, அதன் பிறகு நான் தாலி கட்டுவேன் என ஜாலியாக அதர்வா பதிலளித்துள்ளார். பொண்ணு யாரா இருக்கும்?
Similar News
News September 11, 2025
செப்டம்பர் 11: வரலாற்றில் இன்று

*1803 – டெல்லியில் பிரிட்டிஷ் படைகளுக்கும், மராத்தியர்களுக்கும் இடையில் 2-ம் ஆங்கிலேய மராத்திய போர். *1921 – சுப்பிரமணிய பாரதி மறைந்த நாள். *1957 – இம்மானுவேல் சேகரன் மறைந்த நாள். *1982 – ஷ்ரேயா பிறந்தநாள். *2001 – நியூயார்க் உலக வர்த்தக மையம், பென்டகன் மீது அல்-கொய்தா நடத்திய தாக்குதல்களில் 2,974 பேர் கொலை. *2012 – பாகிஸ்தானில் ஆடை தொழிற்சாலைகளில் நிகழ்ந்த தீ விபத்தில் 315 பேர் உயிரிழப்பு.
News September 11, 2025
ஸ்ரீலீலாவின் கட்டிப்பிடி வைத்தியம்

SM-ல் ரசிகர் எழுப்பிய கேள்விக்கு நடிகை ஸ்ரீலீலா சுவாரஸ்யமான பதில் அளித்துள்ளார். மனச்சோர்வில் இருந்து விடுபடுவது எப்படி என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, ஸ்ரீலீலா உங்கள் குடும்பத்தில் ஒருவரை கட்டிப்பிடியுங்கள் எனவும் இசையைக் கேளுங்கள் என்றும் பதிலளித்தார். இது உங்களுக்கு உதவுமா என்று எனக்கு தெரியாது… ஆனால் நான் அதைத்தான் செய்கிறேன் என ஸ்ரீலீலா தெரிவித்தார்.
News September 11, 2025
அரைக்கம்பத்தில் அமெரிக்க கொடி: டிரம்ப் உத்தரவு

சார்லி கிர்க் மறைவுக்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். அமெரிக்க இளைஞர்களின் மனதை புரிந்து கொண்டதில் சார்லியை விட சிறப்பானவர் யாருமில்லை என தனது SM-ல் டிரம்ப் பதிவிட்டுள்ளார். சார்லி கிர்க் எல்லோராலும் விரும்பப்பட்டவர் என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், அமெரிக்கா முழுவதும் வரும் ஞாயிறு மாலை 6 மணி வரை அமெரிக்க கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.