News October 21, 2025
நெதன்யாகுவை நிச்சயம் கைது செய்வேன்: கனடா PM

போர் குற்றங்கள், போரில் பல உயிர்களை கொன்றதற்காக இஸ்ரேல் PM நெதன்யாகுவை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கனடாவுக்கு வந்தால், அவரை நிச்சயம் கைது செய்வேன் என கனடா பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வாரண்ட் உத்தரவை கனடா பின்பற்றும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
Similar News
News October 21, 2025
பிரபல நடிகர் அஸ்ரானி காலமானார்.. PM மோடி இரங்கல்

பாலிவுட் <<18059439>>நடிகர் கோவர்தன்<<>> அஸ்ரானியின் மறைவால், மிகவும் சோகத்தில் இருப்பதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். மிக சிறந்த நடிகரான அஸ்ரானி தனது நகைச்சுவையின் மூலம் பலரையும் சிரிக்க வைத்துள்ளதாக குறிப்பிட்டு, இந்திய சினிமாவிற்கு அவரின் பங்களிப்பு ஈடுயிணையற்றது எனவும் பதிவிட்டுள்ளார். ஷோலே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற அஸ்ரானி மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News October 21, 2025
RTE மாணவர் சேர்க்கையில் திமுக படுதோல்வி: அன்புமணி

RTE-யின் கீழ் தனியார் உயர்நிலை & மேல்நிலை பள்ளிகளில் உள்ள 34,666 இடங்களுக்கு, வெறும் 16,006 பேரே சேர்ந்துள்ளது, திமுக அரசு படுதோல்வி அடைந்ததை காட்டுவதாக அன்புமணி விமர்சித்துள்ளார். இதுவரை பள்ளியில் சேராதவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தால், மீதமுள்ள 18,600 இடங்களும் நிரம்பியிருக்கும் என்றும் கூறியுள்ளார். எனவே, மீண்டும் மாணவர் சேர்க்கையை புதிதாக நடத்த அவர் வலியுறுத்தியுள்ளார்.
News October 21, 2025
அரசியல் காரணத்தால் நீக்கப்பட்டாரா ரிஸ்வான்?

பாகிஸ்தான் ODI கேப்டன் பதவியில் இருந்து ரிஸ்வான் நீக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் கூறிய கருத்துக்கள் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இஸ்ரேல்- பாலஸ்தீன் போரின் போது, ரிஸ்வான் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்ததன் காரணமாகவே அவர் நீக்கப்பட்டதாக லத்தீப் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில், ரிஸ்வான் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து PCB இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.