News July 8, 2025
பாமக வேட்பாளர்களை நானே முடிவு செய்வேன்: ராமதாஸ்

2026 தேர்தலில் பாமக வேட்பாளர்களை முடிவு செய்வதோடு A, B படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் தனக்கே உள்ளதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி துவங்கி விட்டதால், தேர்தலில் போட்டியிட உள்ளோர் விருப்ப மனு கொடுக்க ஆயுத்தமாகுங்கள் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். GK மணி, AK மூர்த்தி, சையத் மன்சூர் உசேன், புதா அருள்மொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ராமதாஸ் அணியில் உள்ளனர்.
Similar News
News July 8, 2025
மழைக் காலத்தில் இதை கவனியுங்க…

பைக், கார் வைத்திருப்பவர்கள் மழைக்காலத்தில் வாகன பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வண்டிக்கு தேவையான காப்பீடு அம்சங்களை உள்ளடக்கிய இன்ஷூரன்ஸ் பாலிசி (காலாவதி ஆகாமல்) இருப்பதை உறுதிச் செய்துகொள்ளுங்கள். மழையில் வாகனம் அழுக்காக போகிறது என்பதால், மழை முடிந்தபின் சர்வீஸ் செய்துகொள்ளலாம் என அசட்டையாக இருந்தால், பழுது ஏற்பட்டு தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். கவனமாக இருங்கள்!
News July 8, 2025
ரூபாய் நோட்டு அச்சிட இதெல்லாம் பாக்கணும்

ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளை பின்வரும் காரணிகள் அடிப்படையில் தான் கணக்கிட்டு அச்சடிக்கிறது: *பழைய நோட்டுகளை அகற்றுதல் *மாற்றீடு செய்யும் தேவை *இருப்பு தேவை *பொருளாதார வளர்ச்சி விகிதம் *உற்பத்தி விகிதம் *கறுப்புப் பணம் மற்றும் கள்ளப் பணத்தை தடுத்தல் *தங்கம் இருப்பு உள்ளிட்ட காரணிகளை ஆராய்ந்து, எவ்வளவு பணம் தேவை என்பதை கணக்கிட்டு ரூபாய் நோட்டு அச்சடிக்கும் அளவை ரிசர்வ் வங்கி முடிவு செய்கிறது.
News July 8, 2025
முடிவுக்கு வரும் மாறன் சகோதரர்களின் பிரச்னை?

<<16753727>>மாறன் சகோதரர்களிடையேயான சொத்துப் பிரச்னையில்<<>> CM ஸ்டாலின் தலையிட்டு சமாதானம் செய்து வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரையும் நேரில் சந்தித்த அவர், ஒற்றுமையாகவும் இணக்கமாகவும் செயல்பட அறிவுரை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து தம்பி தயாநிதி மாறனுக்கு கூடுதல் பங்குகளை விட்டுக்கொடுக்க கலாநிதி மாறன் முன்வந்திருக்கிறாராம். ஆனால், இதுகுறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.