News October 19, 2025
விஜய் முதல்ல சகவாசத்தை கட் பண்ணனும்: கஸ்தூரி

கரூர் துயரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூட விஜய் பக்கம் உள்ளனர், ஆனால் அவர் கூடவே இருக்கும் சிலர் விஜய் பக்கம் இல்லை என கஸ்தூரி கூறியுள்ளார். எனவே, அவர் தனது உடனிருக்கும் சிலரின் சகவாசத்தை கட் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். கரூர் துயரத்துக்கு பிறகு, விஜய் தலைமையில் கூட்டணி என்பது அரசியல் களத்தில் எடுபடாது என்றும் தெரிவித்துள்ளார். சகவாசம் என யாரை குறிப்பிடுகிறார் கஸ்தூரி?
Similar News
News March 17, 2026
புதுச்சேரியில் பாமக தனித்து போட்டி

புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக பாமக முடிவு செய்துள்ளது. புதுச்சேரி பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. NDA கூட்டணியில் தங்களுக்கு போதிய மரியாதை அளிக்கப்படவில்லை என அக்கட்சி நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த 2021 தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்றாலும் NDA கூட்டணிக்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.
News March 17, 2026
ஆப்கான் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே சமீபத்தில் மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், தலைநகர் காபுலில் உள்ள ஹாஸ்பிடல் மீது பாக் வான்வழி தாக்குதல் நடத்தியதாக ஆப்கான் குற்றம்சாட்டியுள்ளது. இதில் அங்கு சிகிச்சை பெற்றுவந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஹாஸ்பிடல் மீது தாக்குதலை நடத்தவில்லை என பாக் மறுப்பு தெரிவித்துள்ளது.
News March 17, 2026
சுஜாதா பொன்மொழிகள்

*நேரம் ஒரு நதி போன்றது. நீங்கள் ஒரே நீரை இருமுறை தொட முடியாது. *அறிவு என்பது தெரிந்தவற்றை அடுக்கி வைப்பது அல்ல, தெரியாதவற்றைத் தேடிச் செல்வது. *பெண்களின் மெளனம் பல சமயம் சம்மதம் அல்ல, அது ஒரு பெரிய போராட்டத்தின் முடிவு. *நவீன உலகம் என்பது வசதிகளின் தொகுப்பு மட்டுமல்ல, சிக்கல்களின் தொகுப்பும்தான். *வாசிப்பு என்பது மூளைக்குச் செய்யும் உடற்பயிற்சி.


