News September 24, 2025
விஜய்யின் உருவ பொம்மையை எரிப்பேன்: வீரலட்சுமி

பரப்புரைக்காக விஜய் திருவள்ளூர் வந்தால், அவரின் உருவ பொம்மையை எரிப்பேன் என தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி எச்சரித்துள்ளார். போதைப் பொருள் பயன்பாடு குறித்த சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு விஜய் விளக்கமளிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள அவர், மருத்துவ உதவி கேட்ட ரசிகைக்கு விஜய் உதவி செய்யவில்லை என்றும் விமர்சித்துள்ளார். எனவே விஜய்க்கு கருப்பு கொடி காட்டப்போவதாக வீரலட்சுமி கூறியுள்ளார்.
Similar News
News September 24, 2025
இந்தியாவின் தூய்மையான கிராமத்துக்கு செல்ல தயாரா?

ஆசியாவின் மிகவும் தூய்மையான கிராமம் என்று அழைக்கப்படும் மவ்லின்னாங், மேகாலயாவின் கிழக்கு காசி மலையில் அமைந்துள்ளது. இங்கு மூங்கில் குப்பைத் தொட்டிகளை பயன்படுத்துகின்றனர். தலைமுறை தலைமுறையாக பிளாஸ்டிக்கை தவிர்த்து வருகின்றனர். மேலும், இதன் ரம்மியமான இயற்கை அழகு மற்றும் அன்பான விருந்தோம்பல் ஆகியவற்றுக்காக உலகளவில் புகழ் பெற்றுள்ளது. இந்த கிராமத்தை நிச்சயம் ஒருமுறை விசிட் செய்யனும். நீங்க எப்படி?
News September 24, 2025
BREAKING: தீபாவளி போனஸ் அறிவித்தது அரசு

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள்கள் சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்க PM மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 10 லட்சத்து 90 ஆயிரம் ரயில்வே ஊழியர்கள் இதனால் பயன்பெறுவர். தீபாவளி போனஸ் வழங்க ₹1,865 கோடி அரசுக்கு கூடுதலாக செலவாகும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
News September 24, 2025
கடும் சரிவுடன் நிறைவடைந்த பங்குச்சந்தைகள்

இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Sensex 372 புள்ளிகள் சரிந்து 81,729 ஆகவும், நிஃப்டி 110 புள்ளிகள் சரிந்து 25,061 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. அதானி பவர், டாடா மோட்டார்ஸ், கோத்ரேஜ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. அதேநேரம் JSW, சிட்டி யூனியன் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.