News August 7, 2025
கிழிந்த உடையுடன் காலேஜ் சென்றேன்: நடராஜன் உருக்கம்

தனக்கு படிப்பு அவ்வளவாக வராது, தெரிந்த ஒரே விஷயம் கிரிக்கெட் மட்டுமே என நடராஜன் தெரிவித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் கிடைக்கும் பணத்தை வைத்து தான் கல்லூரி ஃபீஸ் கட்டியதாகவும், சில சமயங்களில் சரியான சாப்பாடு இல்லாமல், கிழிந்து உடையுடன் கல்லூரிக்கு சென்றதாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், கடினமான உழைத்தால் முன்னேற முடியும் என்பதற்கு தானும் ஒரு உதாரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News April 6, 2026
கரூர் போல் சென்னையிலும்.. ஆதவ் பகீர் குற்றச்சாட்டு

<<19578094>>விஜய்யின் பிரசாரம் ரத்து<<>> செய்யப்பட்டதற்கு சென்னை கமிஷனர் அருணே காரணம் என ஆதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். தி.நகரில் மாலை 2-6 மணி வரை பரப்புரை செய்ய அனுமதி கொடுத்துவிட்டு, பின்னர் அதனை ரத்து செய்து மாலை 2-3 மணி வரை மட்டுமே அனுமதி தந்தார்கள் என அவர் தெரிவித்தார். ஸ்டாலினின் பேச்சை கேட்டுக்கொண்டு செயல்படும் கமிஷனர் அருண், கரூர் மாதிரியான பிரச்னையை சென்னையில் உருவாக்க முயற்சிக்கிறார் எனவும் கூறினார்.
News April 6, 2026
ஈரான் போரை நிறுத்த பாகிஸ்தான் கொடுத்த ப்ளான்

ஈரானுக்கும் USA-வுக்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக PAK ராணுவ தளபதி முனீர், USA துணை அதிபர் JD வான்ஸ் & ஈரான் அமைச்சர் அராக்சி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன் விளைவாக, போரை நிறுத்துவதற்கான திட்டம் ஒன்றை இருநாடுகளுக்கும் பாகிஸ்தான் அனுப்பிவைத்துள்ளதாம். இதில் உடன்பாடு எட்டப்பட்டால் 1 வாரத்திற்குள் போர் நின்று, ஹார்முஸ் நீரிணை திறக்கப்படலாம் என கூறப்படுகிறது.
News April 6, 2026
ஜவுளித் துறையையும் விட்டு வைக்காத ஈரான் போர்!

போர் சூழல் காரணமாக வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளிகள் மிகப்பெரிய அளவில் தேக்கம் அடைந்துள்ளன. இதையடுத்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று முதல் 50% உற்பத்தியை குறைக்க ஜவுளி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். நூல் விலை ஏற்றமும் உற்பத்தியை குறைப்பதற்கான காரணங்களில் ஒன்று என அவர்கள் கவலை தெரிவித்தனர்.


