News September 30, 2025
டிரம்பின் போர் நிறுத்த திட்டத்தை வரவேற்கிறேன்: PM

டிரம்பின் பேச்சுவார்த்தைக்கு பின் இஸ்ரேல் PM நெதன்யாகு, போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். இந்நிலையில் டிரம்பின், காசா போர் நிறுத்த திட்டத்தை வரவேற்பதாக PM மோடி பதிவிட்டுள்ளார். டிரம்பின் திட்டம் பாலஸ்தீன, இஸ்ரேலிய மக்களுக்கு நீண்டகால அமைதியை வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த முயற்சியால் மோதல் முடிவுக்கு வந்து அமைதி நிலைநாட்டப்படும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 30, 2025
கரூர் சென்ற பாஜக MPக்கள் கார் விபத்தில் சிக்கியது

கரூர் விபத்து குறித்து ஆய்வு செய்ய பாஜக நியமித்த ஹேமமாலினி தலைமையில் MP-க்கள் குழு, டெல்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தடைந்தனர். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பின் அங்கிருந்து கார் மூலம் கரூர் கிளம்பிச் சென்றனர். இந்நிலையில் வழியில் அவர்களது கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. ஆனால் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படாத நிலையில் அதே கார்களில் கரூர் புறப்பட்டு சென்றனர்.
News September 30, 2025
B.Ed, M.Ed மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசிநாள்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியல் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். முதல் கட்ட கலந்தாய்விற்கு பின் அரசு கல்லூரிகளில் 49 காலியிடங்கள், 13 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன. இதுவரை விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இங்கே <
News September 30, 2025
Windows 10 யூஸ் பண்றீங்களா.. இத கவனியுங்க!

அக்டோபர் 14-ம் தேதியுடன், Windows 10 OS-க்கு வழங்கிய Backend Support-ஐ நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இனி பயனர்களுக்கு செக்யூரிட்டி அப்டேட், technical support போன்ற சேவைகள் நிறுத்தப்படும். ஜூலை 2015-ல் அறிமுகம் செய்யப்பட்ட Windows 10, 140 கோடி கணினிகளில் பொறுத்தப்பட்டுள்ளது. இது சைபர் தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்பதால், Windows 11 OS-க்கு மாறும் படி வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.