News October 9, 2025
காசா அமைதி திட்டத்தை வரவேற்கிறேன்: PM மோடி

அமைதி திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேலும், ஹமாஸும் கையெழுத்திட்ட நிலையில் PM மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். டிரம்ப்பின் முயற்சியையும் பாராட்டிய அவர், இந்த ஒப்பந்தம் PM நெதன்யாகுவின் வலுவான தலைமைக்கு ஒரு பிரதிபலிப்பு என தெரிவித்துள்ளார். பணயக்கைதிகள் விடுவிப்பு மற்றும் காசா மக்களுக்கு கிடைக்கும் மனிதாபிமான உதவிகள், நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News October 9, 2025
இலங்கை கடற்படை அட்டூழியம்: ஸ்டாலின் கடிதம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே தமிழக மீனவர்கள் 30 பேர் உள்பட 47 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது. இந்நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்க கோரி வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க கூட்டு பணிக்குழுவை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
News October 9, 2025
விஷமாக மாறிய மருந்து.. குழந்தையை கொன்ற துயரம்

ம.பி.,யில் இருமல் சிரப் குடித்த திவ்யான்ஷ் (6) உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல் காரணமாக குழந்தையின் தந்தை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு, டாக்டர் பரிந்துரைத்த இருமல் சிரப்பை நாளொன்றுக்கு 4 முறை கொடுத்துள்ளார். மருந்து விஷமாக மாறி பிஞ்சு உயிர் பலியாகியுள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பட்டியலில், இக்குழந்தை பெயர் இல்லாததால், அரசின் ₹4 லட்சம் நிவாரணமும் கிடைக்கவில்லை.
News October 9, 2025
கரூர் துயரம்: சற்றுமுன் அதிரடியாக கைது

கரூர் துயர சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை சூடுபிடித்துள்ளது. சம்பவத்தின்போது ஆம்புலன்ஸை வழிமறித்து டிரைவரை தாக்கியதாக தவெக சேலம் மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல், ஏற்கெனவே கைது செய்யப்பட்ட கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகனை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் 2 நாள்கள் விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.