News January 22, 2025
இதற்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்: ஷமி

கடினமான காலத்தை கடந்து வந்துவிட்டதாக ஷமி தெரிவித்துள்ளார். இந்த தருணத்திற்காக ஆண்டு முழுவதும் காத்திருந்ததாகவும், சரியான Fitnessல் இருக்க கடுமையாக உழைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் ஓடும்போது கூட காயம் ஏற்பட்டுவிடுமோ என பயந்ததாகவும், உங்களை நீங்களே நம்பினால் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார். 2023 WCக்கு பிறகு தற்போதுதான் அவர் IND அணியில் இடம்பெற்றுள்ளார்.
Similar News
News August 27, 2025
IND vs PAK: வாசிம் அக்ரமின் விருப்பம் இதுதான்

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பாக்., முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் விருப்பம் தெரிவித்துள்ளார். இதை உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் கொண்டாடுவார்கள் எனவும், வரலாற்று பூர்வ நிகழ்வாக இது அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். எல்லை பதற்றம் காரணமாக கடந்த 2014 முதல் இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.
News August 27, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 27, ஆவணி 11 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 1:45 PM – 2:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: வளர்பிறை
News August 27, 2025
சோஷியல் மீடியாவுக்கு கட்டுப்பாடு தேவை: SC

சோஷியல் மீடியாவில்(SM) வெளியிடப்படும் பதிவுகளை முறைப்படுத்த உரிய வழிகாட்டுதல்களை வகுக்குமாறு மத்திய அரசுக்கு SC அறிவுறுத்தியுள்ளது. SM-ல் பதிவுகள் வணிகமயமாகியதால், மாற்றுதிறனாளிகள், பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் பாதிக்கப்படுவதாக கோர்ட் கவலையும் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக 5 யூடியூபர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.