News March 29, 2025

எனக்கு வருத்தம் இருந்தது: மாதவன்

image

‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்திற்காக தான் பெற்ற தேசிய விருதை யாரும் பெரிதாக கொண்டாடவில்லை என மாதவன் தெரிவித்துள்ளார். தமிழ், ஹிந்தி என இருமொழிகளிலும் படம் இருந்ததால், அதை யாரும் உரிமை கொண்டாடவில்லை எனவும், இது முதலில் தனக்கு வருத்தம் அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், தன்னிடம் ஒரு கதை இருக்கிறது, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தனது நோக்கம் என உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 31, 2025

116 ரன்களில் KKR ஆல்-அவுட்

image

மும்பைக்கு எதிரான இன்றைய IPL போட்டியில் KKR அணி, வெறும் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனால், பேட்டிங் செய்த KKR அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன்கள் எடுத்தார். மும்பை பவுலர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

News March 31, 2025

விரைவில் மாதந்தோறும் மின் கணக்கீடு

image

மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கீடு செய்யும் திட்டத்தை, அடுத்த 6 மாதங்களுக்குள் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3.04 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் திட்டத்திற்கு தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், அடுத்த 3- 4 மாதங்களுக்குள் தகுதியான நிறுவனங்களுக்கு பணி ஆணை வழங்கப்படும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதன்மூலம், மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேற உள்ளது.

News March 31, 2025

மகிழ்ச்சிக்கு 5 நிமிடங்கள்

image

தினசரி 5 நிமிடங்கள் ஒதுக்கி இப்பழக்கங்களை கடைப்பிடியுங்கள்: *1 நிமிடம் நிதானமாக சுவாசியுங்கள். அமைதி ஆற்றலை உள்ளிழுத்து, அன்பை வெளியிடுங்கள் *கிடைத்துள்ள ஆசிர்வாதங்களுக்காக நன்றி கூறுங்கள் *நாளை நன்றாகவே இருக்கும் என்று `ஆல் இஸ் வெல்’ சொல்லுங்கள் *கடந்தகால கசப்புகளை போக விடுங்கள், நாளை நமதே *நீங்கள் காணும் ஒவ்வொருவரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்.

error: Content is protected !!