News February 12, 2025
பெரிய படங்களை பார்த்து ஏமாற்றமடைந்தேன்: ரெஜினா
பொதுவாக பெரிய பட்ஜெட் படங்கள், ஸ்டார் படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என ரெஜினா கசாண்ட்ரா தெரிவித்துள்ளார். பல பெரிய படங்களில் பெண் கேரக்டர்கள் மோசமாக எழுதப்பட்ட விதத்தால் ஏமாற்றமடைந்ததாகவும், ஒரு படத்தில் பெண் கதாபாத்திரம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதை கவனித்தாலே, அந்த படத்தின் கதையின் வலிமையை உணரலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News February 12, 2025
BREAKING: 1000 இடங்களில் அரசு மருந்தகங்கள்
மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்கள்’ திறக்கப்படும் என்று மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. பிப்.24ஆம் தேதி சென்னையில் முதல்வர் மருந்தகத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த மருந்தகங்களில் மிக குறைந்த விலையில், மருந்து, மாத்திரைகள் கிடைக்கும். இதனால், மக்கள் அதிகளவில் பயன்பெறுவதோடு, மருந்து, மாத்திரைகளுக்கு செலவிடும் தொகையும் குறையும்.
News February 12, 2025
நாளை சூர்யாவின் “Retro” 1st single
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் “Retro” திரைப்படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு நாளை வெளியாகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியாகும் ‘கண்ணாடி பூவே’ பாடலின் அறிவிப்பு சிறப்பு போஸ்டர், சூர்யா கைதி உடையில் சிறையில் தன் காதலை நினைத்து பாடுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது. மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
News February 12, 2025
BREAKING: ஆபரணத் தங்கத்தின் விலை ₹960 குறைவு
கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ₹960 குறைந்துள்ளதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹120 குறைந்து ₹7,940க்கும், சவரனுக்கு ₹960 குறைந்து ₹63,520க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹107க்கு விற்பனை செய்யப்படுகிறது.