News August 24, 2024
ரஜினியின் பேச்சால் வியந்து போனேன்: எம்பி பாராட்டு

‘கலைஞர் என்னும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி பேசியது எல்லோரது மனதையும் தொட்டதாக விசிக எம்பி ரவிக்குமார் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும்கூட என அரங்கிலிருந்த அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் மனதில் பட்டதை பேசும்போது அந்தப் பேச்சுக்கு ஆற்றல் அதிகம். அந்த ஆற்றல் கொண்ட ரஜினி, அரசியலுக்கு வந்திருக்கலாம் என கூறியுள்ளார்.
Similar News
News December 3, 2025
JUST IN: திருவள்ளூரில் நாளை விடுமுறை!

‘டிட்வா’ புயல் காரணமாக நாளையும் (டிச.4) திருவள்ளூரில் பெய்து வரும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திருவள்ளூரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 3, 2025
BREAKING: நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கனமழை முன்னெச்சரிக்கையை அடுத்து நாளை (டிச.4) சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனால் தொடர்ந்து 3-வது நாளாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 3, 2025
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குக: இன்பதுரை

டிட்வா புயல் & மழை வெள்ள பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க திமுக அரசு தவறிவிட்டதாக அதிமுக MP இன்பதுரை ராஜ்யசபாவில் குற்றம் சாட்டினார். விவசாய நிலங்கள் மொத்தமும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. பருவமழை காலத்திற்கு முன்பே வாய்க்கால்களை தூர்வார EPS பலமுறை வலியுறுத்தியும், அதை செய்ய திமுக அரசு தவறிவிட்டது என சாடிய அவர், நீரில் மூழ்கியுள்ள பயிர்களை உடனே கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.


