News November 23, 2024
ஜோதிகாவுக்கு முன்பே நான் சொல்லிட்டேன்…கூல் சுரேஷ்

சென்னையில் நடைபெற்ற காக்கா பட நிகழ்வில் பேசிய கூல் சுரேஷ், கங்குவா படத்திற்கு முதலில் நானே குரல் கொடுத்தேன். பின்னால் தான் ஜோதிகா குரல் கொடுத்தார். இயக்குனர் சிவா, ஞானவேல் ராஜாவிடமும் வாய்ப்புகளை கேட்டேன். ஆனால், இப்பொது வரை வாய்ப்பே கிடைக்கவில்லை. கங்குவா படத்தில் உள்ள கதாபாத்திரங்களை பார்த்தால், அதில் நான் நடித்திருக்கலாமே என தோன்றும் என்பதால் கங்குவா படத்தை நான் பார்க்கவே இல்லை என்றார்.
Similar News
News December 3, 2025
BREAKING: விடுமுறை அறிவித்தார் கலெக்டர்

கனமழை எதிரொலியாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, புதுச்சேரிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, குமரி, தி.மலை மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 3, 2025
Sports 360°: இந்திய டி20 அணி இன்று அறிவிப்பு

*SA-க்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது *SMAT தொடரில், கர்நாடகாவிடம் 145 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகம் படுதோல்வி *அயர்லாந்துக்கு எதிரான 3-வது டி20-ல் வங்கதேசம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி *நட்பு கால்பந்து போட்டியில் இந்தியா U-20 அணி 4-2 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது *WI-க்கு எதிரான முதல் டெஸ்ட்டின், முதல் இன்னிங்ஸில் NZ 231 ரன்களுக்கு ஆல் அவுட்
News December 3, 2025
திருக்கார்த்திகை தீபத்தின் வரலாறு!

விஷ்ணு – பிரம்மாவுக்கு இடையே யார் பெரியவர் என்ற சண்டை உருவானது. இந்த சிக்கலை தீர்க்க, சிவன் ஒளிச் சுடராக தோன்றி, தன் தோற்றத்தின் அடிமுடி கண்டுபிடிப்பவரே பெரியவர் என அறிவித்தார். விஷ்ணு வராஹ ரூபமெடுத்து பாதங்களை தேடினார். அன்னப்பறவையில் ஏறி, பிரம்மா தலையை தேடினார். ஆனால் இருவருமே தோற்றனர். யார் என்ற அகந்தையை தான் என அழித்த சிவனின் இந்த அக்னி சுடரே கார்த்திகை தீபமாக நினைவுகூரப்படுகிறது.


