News March 20, 2024

ஆட்டுப்பால் குடித்து உயிர் பிழைத்தேன்

image

பிரித்விராஜ், அமலாபால் நடிப்பில் ‘ஆடு ஜீவிதம்’ படம் மார்ச் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், ரியாத்தில் ஆடு மேய்த்த கொடுமை குறித்து ஆடு ஜீவிதம் படத்தின் நிஜ ஹீரோவான நஜீப், ‘எனக்குச் சாப்பிட உணவு கிடைக்காமல் ஆட்டுப் பாலைக் கறந்து அப்படியே குடித்துப் பசியாறினேன். குடிப்பதற்கே தண்ணீர் சரியாகக் கிடைக்காது. குளிக்காமலே நாள்களைக் கடத்தினேன். ஏறக்குறைய பரதேசி ரேஞ்சுக்கு மாறிவிட்டேன்’ என்றார்.

Similar News

News October 31, 2025

நீண்ட ஆயுளுக்கு உதவும் இரவு குளியல்

image

காலை குளியல் போன்றே, இரவு குளியலும் வெறுமென உடலை சுத்தப்படுத்துவது மட்டுமல்லாமல், உடலுக்கு பல்வேறு நன்மைகள் தருகிறது. தூங்குவதற்கு 1-2 மணி நேரத்திற்கு முன்பு குளிப்பது மிகவும் சிறந்தது. மோசமான தூக்கம் இதய நோய், மனச்சோர்வு ஆகியவற்றை ஏற்படுத்தி ஆயுட்காலத்தை குறைக்கிறது. ஆனால், இரவு குளியல் ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுத்து, நீண்ட காலம் வாழ உதவுகிறது. மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்க.

News October 31, 2025

திமுக பிரிவினையை ஏற்படுத்துகிறது: தமிழிசை

image

நாட்டு மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தும் வேலையை திமுக செய்வதாக தமிழிசை குற்றஞ்சாட்டியுள்ளார். பிஹார் மக்களை திமுகவினர் கீழ்த்தரமாக பேசுவதாகவே PM மோடி குறிப்பிட்டதாகவும், அது திமுக குறித்து வைக்கப்பட்ட விமர்சனமே தவிர தமிழர்கள் மீது கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பிஹாரிகள் அறிவில்லாதவர்கள், தமிழர்களின் வேலையை பறிப்பவர்கள் என்று கே.என்.நேரு பேசியதை தமிழிசை சுட்டிக்காட்டினார்.

News October 31, 2025

காதல் கைகூட செய்ய வேண்டிய வழிபாடு!

image

நம் வாழ்வின் தேவைகளை கடவுளிடம் வேண்டிப் பெறுவது போலக் காதலையும் வேண்டிப்பெறலாம். காதல் கைகூட காதற் கடவுளர்களான ரதி – மன்மதனை வணங்க வேண்டுமென சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் திண்டுக்கல், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் உள்ள மன்மதனின் சிலைக்கு பெண்களும், ரதியின் சிலைக்கு ஆண்களும் அபிஷேகம் செய்து வழிபட, காதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

error: Content is protected !!