News July 24, 2024
இயக்குநர்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்: மீனாட்சி

ஒரே நேரத்தில் இளம் நடிகர்களுக்கும், சீனியர் நடிகர்களுக்கும் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு தனக்கு மட்டும்தான் கிடைத்திருப்பதாக நடிகை மீனாட்சி சௌத்ரி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தான் நடித்துள்ள The GOAT, லக்கி பாஸ்கர் ஆகிய இரு படங்கள் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவிருப்பதாகக் கூறிய அவர், பான் இந்தியா படங்களில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர்களுக்கு நன்றி கடன்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
ஒருநாளைக்கு 5 மணி நேரம் மட்டுமே பள்ளி..

பின்லாந்தின் கல்வி முறை உலகையே ஆச்சரியப்படுத்துகிறது. இங்கு மாணவர்கள் ஒரு நாளைக்கு 5 மணிநேரம் மட்டுமே பள்ளியில் செலவிடுகிறார்கள். ஒவ்வொரு பீரியடுக்கு பிறகு 15 நிமிட இடைவேளையும், சிறிய வீட்டுப்பாடமும் உண்டு. இந்த மன அழுத்தமில்லாத சூழல், குழந்தைகளின் படைப்பாற்றல் மற்றும் கற்றல் ஆர்வத்தை அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பின்லாந்து உலகளாவிய கல்வி மதிப்பீடுகளில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
News March 5, 2026
தமிழக தேர்தல் எப்போது? வெளியான அப்டேட்

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதியை <<19301081>>வரும் 13-ம் தேதி<<>> ECI அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், 2021 சட்டப்பேரவைத் தேர்தலைப் போல் இம்முறை ஏப்ரலில் தேர்தல் நடத்த வாய்ப்புகள் குறைவு எனக் கூறப்படுகிறது. தமிழகத்திற்கு மே மாதத்தில் தேர்தல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 10 உடன் முடிவடைகிறது.
News March 5, 2026
ராஜ்யசபா தேர்தலில் வேட்பாளரை இறக்கிய ராமதாஸ்

ராஜ்யசபா தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமதாஸின் உதவியாளரான ப.சுவாமிநாதன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ராமதாஸுக்கு 2 MLA-க்கள் ஆதரவு உள்ள நிலையில் இந்த வேட்புமனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக வசமுள்ள ராஜ்ய சபா சீட்டுக்கு மனுத்தாக்கல் செய்துள்ள அன்புமணிக்கு போட்டியாகவே இந்த முடிவை ராமதாஸ் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


