News October 20, 2025
தப்பு பண்ணிட்டேன்.. அப்பா அடிச்சிட்டாரு: துருவ் விக்ரம்

‘ஐ’ படத்தின் ‘மெர்சலாயிட்டேன்’ பாட்டு ரிலீசுக்கு முன்பு, அப்பாட்டு இருந்த Pen drive தனக்கு கிடைக்க, ஸ்கூலில் கெத்து காட்ட, அதை பசங்களுக்கு போட்டு காட்டியுள்ளார் துருவ் விக்ரம். இது தெரிஞ்சதும் அப்பா ஓங்கி முதுகில் அடித்துவிட்டதாகவும், 2 வாரத்துக்கு அவரோட கை அச்சு அப்படியே இருந்துச்சு எனவும் துருவ் விக்ரம் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 31, 2026
நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது

இன்று நள்ளிரவு (ஏப்.1) முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. கப்பலூர், நாங்குநேரி, வானகரம், தேனி, பரனூர் உள்ளிட்ட தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள 68 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. சுமார் 3% – 5% வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் என கூறப்படுவதால், வாகனங்களுக்கேற்ப ₹5 – ₹100 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு ஷேர் பண்ணுங்க.
News March 31, 2026
விஜய் Vs உதயநிதி… பாதுகாப்பில் பாரபட்சமா?

விஜய்யின் கொளத்தூர் பிரசாரத்தில் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என தவெக தரப்பு EC-யிடம் புகார் அளித்துள்ளது. அதற்கு பதிலடியாக திருவண்ணாமலையில் பெரும் கூட்டத்திற்கு நடுவே DCM உதயநிதி பிரசாரம் செய்ததை திமுகவினர் குறிப்பிட்டு வந்தனர். இந்நிலையில் இருவரின் பிரசார வாகனங்களின் முன் நிற்கும் போலீசாரின் எண்ணிக்கையை சுட்டிக்காட்டி, இதுதான் சமமான பாதுகாப்பா என தவெகவினர் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
News March 31, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

பங்குனி உத்திர விழாவையொட்டி, நாளை (ஏப்.1) தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதேபோல், நார்த்தாமலை தேர் திருவிழாவை முன்னிட்டு ஏப்.6-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். அதேநேரம், முழு ஆண்டுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.


