News May 4, 2024
குரலைத் தணித்துக்கொள்கிறேன்

இசை பெரிதா? பாடல் பெரிதா என ஒப்பிடும் வகையில் சமீபத்தில் வைரமுத்து இளையராஜாவை மறைமுகமாகத் தாக்கி பேசியிருந்தார். இதற்கு இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கடும் எதிர்வினையாற்றி இருந்தார். இந்நிலையில், வைரமுத்து தனது x பதிவில், “குயில் கூவத் தொடங்கிவிட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக்கொள்ள வேண்டும், மக்கள் பேசத் தொடங்கிவிட்டால் கவிஞன் தன் குரலைத் தணித்துக்கொள்ள வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News February 12, 2026
புயல் சின்னம்.. இங்கெல்லாம் கனமழை பொளக்கும்

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பிப்.15-ல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால் நாளை (பிப்.13) தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி & குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும், காலையில் பனிமூட்டம் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
News February 12, 2026
பிப்.14 முட்டாள்கள் தினமாக மாறும்: மிருணாள் தாக்கூர்

தனுஷ் – மிருணாள் இருவரும் வரும் பிப்.14 அன்று திருமணம் செய்துகொள்ள போவதாக சில நாள்களுக்கு முன்பு வதந்தி பரவியது. அதை மிருணாள் ஏற்கெனவே மறுத்துவிட்டார். இந்நிலையில், இந்த பேச்சை யார் ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஆனால் தற்போது என்னை அச்சுறுத்தும் விசயமாக மாறிவிட்டது என்றும், வதந்தி பரப்பியவர்களுக்கு பிப்.14 என்பது ஏப்.1-ம் தேதியாக (முட்டாள்கள் தினம்) மாறும் எனவும் மிருணாள் தெரிவித்துள்ளார்.
News February 12, 2026
நடிகர் அர்ஜுன் கழுத்து எரிந்தது.. REWIND

அன்று நள்ளிரவு 2 மணிக்கு அப்பா வந்தார். அவரது கழுத்து எரிந்திருந்தது. அந்த நொடியை என்னால் மறக்கவே முடியாது என நடிகை ஐஸ்வர்யா, தனது அப்பா அர்ஜுன் பற்றி சமீபத்தில் பேசியுள்ளார். ‘முதல்வன்’ பட பாம் பிளாஸ்ட் சீன் எடுக்கும்போது விபத்து ஏற்பட்டு அப்பா கழுத்து எரிந்ததை நினைக்கும்போது இப்போதும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது அவரது ரசிகர்களை காயப்படுத்தியுள்ளது.


