News February 11, 2025
என் உடலை லவ் பண்றேன்: மனம் திறந்த தமன்னா

தன் உடலை நேசிப்பது எவ்வளவு அவசியம் என்பதை தமன்னா மனம் திறந்து பேசியுள்ளார். நான் என் உடலை நேசிக்கிறேன். ஒவ்வொரு நாள் முடிவிலும், ஷவரில் குளிக்கும் போது, என் உடல் பாகம் ஒவ்வொன்றையும் தொட்டு நன்றி சொல்கிறேன். கேட்பதற்கு உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், நாள் முழுவதும் நான் உழைக்க உதவும் உடலை ஆராதிக்க வேண்டும் தானே என்று கேட்கிறார் தமன்னா. பாடி பாசிடிவிடியை எப்போது வலியுறுத்துபவர் தமன்னா.
Similar News
News March 16, 2026
அறிவித்தார் செங்கல்பட்டு கலெக்டர்

தமிழ்நாட்டில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் வாராந்திர மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம், மக்கள் தொடர்பு முகாம், விவசாய குறை தீர்வு நாள் கூட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் ஆகியவைகள் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுறும் வரை நடைபெறாது என மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
News March 16, 2026
கருத்துக்கணிப்பில் நம்பிக்கை இல்லை: RS பாரதி

இடையில் வருவதெல்லாம் கடந்து செல்லும் மேகங்கள் என விஜய்யை, திமுகவின் RS பாரதி சாடியுள்ளார். மேலும், கருத்துக்கணிப்புகளின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும், வரும் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் ஆருடம் தெரிவித்தார். லயோலாவின் IPDS, Times Now கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காது என கூறியுள்ள நிலையில், அது பேசுபொருளாக மாறியுள்ளது.
News March 16, 2026
யாருடன் கூட்டணி?.. ராமதாஸ் இன்று அறிவிக்கிறார்

ராமதாஸ் தரப்பு (பாமக) இதுவரை கூட்டணியை உறுதி செய்யாத நிலையில், யாருடன் கூட்டணி செல்வார் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக, தவெக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகளில் போட்டி உள்ளிட்ட அறிவிப்புகளை ராமதாஸ் இன்று வெளியிட இருப்பதாக அவரது மகள் ஸ்ரீகாந்தி தெரிவித்துள்ளார்.


