News September 5, 2024
என் நெஞ்சிக்குள்ள குடியிருக்கும்…

விஜய் உடன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக் கொண்ட BTS புகைப்படத்தை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வார்த்தைகள் எதுவும் தேவையில்லை என்றும், தனது G.O.A.T விஜய் அண்ணா எனவும் குறிப்பிட்டு நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நெஞ்சில் கைவைத்தபடி விஜய் போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. உங்களுக்கு G.O.A.T டிக்கெட் கிடைச்சிதா? கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News August 4, 2025
நீங்க இனிப்பு அதிகம் சாப்பிடுபவரா?

சர்க்கரை அதிகமுள்ள பானங்களை, ஒரு நாளைக்கு 2 முறை (அ) அதற்கு அதிகமாக அருந்துவோரின் சிறுநீரில் புரோட்டீன் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது, சிறுநீரகங்கள் தங்கள் பணியை சரிவர செய்ய முடியாத நிலையை காட்டுகிறது. ஆகவே சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், அவை தேநீர், காஃபி போன்றவையாக இருந்தாலும், சோடா, கோலா போன்ற கூல் டிரிங்ஸாக இருந்தாலும், குறைவாக அருந்துவது நல்லது. தவிர்ப்பது மிகவும் நல்லது.
News August 4, 2025
BREAKING: தவெக மாநாடு தேதி மாற்றம்

மதுரையில் ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற இருந்த தவெக மாநாட்டின் தேதி மாற்றப்பட்டுள்ளது. 27-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் நிலையில், பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் எழுந்தது. அதனால், போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை. இன்று மதுரை எஸ்.பி. அலுவலகம் சென்ற புஸ்ஸி ஆனந்த், மாநாடு தேதியில் மாற்றம் இருப்பதாக அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 18 – 22-க்குள் ஏதேனும் ஒரு தேதியில் மாநாடு நடக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
News August 4, 2025
ஷாருக்கானுக்கு எதன் அடிப்படையில் விருது? ஊர்வசி

மலையாளத்தில் ஊர்வசிக்கும், விஜயராகவனுக்கும் சிறந்த துணை நடிகர், நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இதுபற்றி பேசிய ஊர்வசி, ஷாருக்கானுக்கு எதன் அடிப்படையில் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது, அதேசமயம் தங்களுக்கு ஏன் சிறந்த நடிகர், நடிகை பிரிவில் வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். தாங்களும் பாடுபட்டுதான் நடிப்பதாக கூறிய அவர், அரசு தரும் விருது ஓய்வூதியம் அல்ல என்றும் சாடியுள்ளார்.