News December 4, 2024
எனக்கு தெரியும்.. ஆனா சொல்ல மாட்டேன்: KL ராகுல் சஸ்பென்ஸ்

AUS உடனான 2-வது டெஸ்ட்டில் எப்போது களமிறங்குவேன் என்பது தனக்கு தெரியும். ஆனால் அதை இப்போது சொல்ல மாட்டேன் என செய்தியாளர் சந்திப்பில் KL ராகுல் தெரிவித்துள்ளார். Playing 11-ல் இடம்பிடிப்பதே தனக்கு போதுமானது எனவும் அவர் கூறியுள்ளார். முதல் டெஸ்ட்டில் ராகுல்- ஜெய்ஸ்வால் நல்ல பாட்னர்ஷிப் அமைத்த நிலையில், இந்த ஜோடியே 2-வது டெஸ்டிலும் ஓபனிங் இறங்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
Similar News
News December 18, 2025
வங்கி கணக்கில் ₹10,000.. இன்று முதல் தொடங்கியது!

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்வர் திறனாய்வு தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. ஜன.31-ல் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியான 1,000 மாணவர்களுக்கு, ஒரு கல்வியாண்டுக்கு தலா ₹10,000 உதவித்தொகை வழங்கப்படும். <
News December 18, 2025
2025-ல் அதிகம் ரசித்த தமிழ் பாடல்கள்

2025-ல் பலரையும் ரசிக்க வைத்த பாடல்கள் எவை என்று தெரியுமா? இசை, பாடல் வரிகள், பாடிய குரல்கள் என அனைத்தும் சேர்ந்து ரசிகர்களை ஒருபக்கம் ஆட்டம் போட வைத்தது. மறுபக்கம் உணர்ச்சி பொங்க உருகச் செய்தது. அந்த வகையில், யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை கடந்த பாடல்களின் பட்டியலை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்த பாடல் எது? SHARE.
News December 18, 2025
1500 பேருக்கு 27,000 குழந்தைகள்!

மகாராஷ்டிராவில் உள்ள செண்டுருசானி கிராமத்தில், கடந்த 3 மாதங்களில் 27,397 பிறப்புகள் பதிவாகியுள்ளன. இதில் வியக்க வைக்கும் வினோதம் என்னவென்றால், அந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே 1,500 தான். இந்த செய்தி தீயாக பரவிய நிலையில், பிறப்பு சான்றிதழ் பதிவேடுகளில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சைபர் மோசடிகளுக்கு பயன்படுத்த, இத்தகைய போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.


