News August 19, 2025
நிதியை கொடுப்பார் என நம்புகிறேன்: CM ஸ்டாலின்

TN அரசின் கோரிக்கைகளை ஏற்று விரைவில் உரிய நிதியை FM நிர்மலா விடுவிப்பார் என நம்புவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அ<<17453647>>மைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி<<>> ஆகியோர் டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்த புகைப்படங்களை பகிர்ந்து இதனை பதிவிட்டுள்ளார். முன்னதாக நபார்டு வங்கியின் RIDF, மற்றும் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கான FIDF நிதியை விடுவிக்க CM ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தது கவனிக்கத்தக்கது.
Similar News
News January 18, 2026
தேர்தலுக்கு ரெடியாகும் காங்கிரஸ்!

தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வரும் 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல்காந்தி ஆகியோருடன் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பின் TN-ல் நடைபெறும் கட்சியின் முதல் கூட்டம் என்பதால் அரசியல் கவனம் பெற்றுள்ளது.
News January 18, 2026
தமிழக தேர்தல்.. பாஜக தேர்தல் அறிக்கை குழு அறிவிப்பு

திமுக, அதிமுக, தவெகவை தொடர்ந்து பாஜகவும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி முன்னாள் தலைவர் தமிழிசை தலைமையில் தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் VP துரைசாமி, ராமலிங்கம், ராம ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுக பெண்களுக்கு <<18879251>>மாதம் ₹2000<<>> உள்ளிட்ட கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
News January 18, 2026
பண மழை கொட்டும் 3 ராசிகள்

மங்களகரமான இந்த புத்தாண்டில் முதல்முறையாக பிப்.6-ல் சூரியன் அவிட்டம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இதனால் மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்கள் செழுமையாக கிடைத்து ஸ்திரத்தன்மை உண்டாகும். சரியான முதலீடுகளால் லாபமும் பெருகும். பதவி உயர்வு உங்களை தேடிவரும். காதல் கைகூடுவது மட்டுமல்லாமல், கணவன் – மனைவி உறவும் பலப்படும் என வேத ஜோதிடம் கூறுகிறது.


