News December 5, 2024
கதை சொல்லும் திறன் எனக்கில்லை!

தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லும் திறமை தனக்கு இல்லை என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். பட இயக்கும் வாய்ப்பை பெற்றது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “அட்டகத்தி பட ரிலீஸின்போது, தயாரிப்பாளர் CV குமார் பற்றி கேள்விப்பட்டு அவரை முகநூலில் பின் தொடர்ந்து வாய்ப்பு கேட்டேன். அவரிடம் ஸ்கிரிப்ட்டை அளித்தேன். படித்த உடனே படம் தயாரிக்க சம்மதம் சொன்னார்” என நெகிழ்ச்சியோடு கூறினார்.
Similar News
News December 13, 2025
மதுரை: 10th தகுதி.. ரூ.56,900 சம்பளத்தில் வேலை ரெடி

மதுரை மக்களே மத்திய அரசின் புலனாய்வு பிரிவில் (Intelligence Bureau) பல்வேறு பணிகளுக்கு 362 காலியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளன. இதற்கு 10th படித்தவர்கள் இங்கு <
News December 13, 2025
இந்தியா-ஓமன் FTA ஒப்பந்தம்: அமைச்சரவை அனுமதி

இந்தியா-ஓமன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு (FTA) மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. PM மோடி டிச.17, 18 தேதிகளில் ஓமனுக்கு செல்லும்போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. FTA மூலம் இருநாடுகளிலும், சுங்க வரி வெகுவாக குறைக்கப்படும் அல்லது முற்றிலுமாக நீக்கப்படும். இதனால், இந்திய பொருள்கள் ஓமனிலும், ஓமனின் பொருள்கள் இந்தியாவிலும் மலிவான விலையில் கிடைக்கும்.
News December 13, 2025
அரசியலில் குதித்த ராமதாஸின் அடுத்த வாரிசு

பாமகவில் நடக்கும் பஞ்சாயத்துகளுக்கு இடையே ஸ்ரீகாந்தியின் மற்றொரு மகனான சுகுந்தனையும் ராமதாஸ் களமிறக்கியுள்ளார். அவருக்கு மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கக் கோரி விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அவர் பங்கேற்றார். முன்னதாக, முகுந்தனுக்கு பாமகவில் பொறுப்பு வழங்கியதே ராமதாஸ் – அன்புமணி இடையே சண்டை வளர முக்கிய காரணமாக அமைந்தது.


