News April 8, 2025
குறட்டைக்கு மருந்து கண்டுபிடிச்சிருக்கேன்: ஆர்.கே.

குறட்டைக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாக நடிகர் ஆர்.கே. தெரிவித்துள்ளார். உலகத்திலேயே குறட்டைக்கு மருந்து கிடையாது என்றும், தாம்தான் அதை முதன்முதலில் கண்டுபிடித்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த மருந்தை அனைவருக்கும் இலவசமாக தருவதாகவும் ஆர்.கே. குறிப்பிட்டுள்ளார். அந்த மருந்தை 7 நாட்கள் தாெடர்ந்து உச்சந்தலையில் தடவ வேண்டும், அப்படி தடவினால் குறட்டை வரவே வராது என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News November 25, 2025
Ro-Ko இல்லாததால் தள்ளாடுகிறதா இந்தியா?

தற்போது கவுகாத்தி டெஸ்டில் இந்திய அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. இந்திய அணியின் இந்த நிலைக்கு, கோச் கம்பீரை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், இதில் மற்றுமொரு பரிமாணமும் உள்ளது. ரோஹித், கோலி ஆகியோர் இருந்திருந்தால், சொந்த மண்ணில் இந்திய அணி இவ்வளவு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்காது என சில நெட்டிசன்கள் குறிப்பிடுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News November 25, 2025
அமைச்சர் அன்பில் மகேஸுக்கு உயரிய விருது

சாரண சாரணியர் இயக்கத்தின் உயரிய விருதான ‘வெள்ளி யானை’ விருதினை அன்பில் மகேஸ் பெறுகிறார். உ.பி.,யின் லக்னோவில் நாளை (நவ.26) நடைபெறும் 19-வது தேசிய ஜாம்போரி விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இவ்விருதை அவருக்கு வழங்கவுள்ளார். TN சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவராக இருக்கும் அன்பில், இயக்கத்தை சிறப்பாக வழிநடத்தியதற்காக இவ்விருது வழங்கப்படுகிறது.
News November 25, 2025
விவசாயிகளின் கவலையை புரியாத திமுக: R.B. உதயகுமார்

விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், EPS நீலிக்கண்ணீர் வடிப்பதாக CM ஸ்டாலினின் விமர்சனத்திற்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார். விவசாயிகளின் கண்ணீர், கவலையை புரிந்துகொள்ளாத அரசாக திமுக இருக்கிறது என்று சாடிய அவர், தமிழகத்தின் வாழ்வாதார உரிமைகளை பறிகொடுத்துவிட்டு பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதுகிறார் என்றும் தனது குறைகளை மறைக்கவே EPS-ஐ <<18374909>>ஸ்டாலின் <<>>விமர்சிப்பதாக குற்றம் சாட்டினார்.


