News February 24, 2025
கனவில் கூட நினைச்சு பாக்கல: பிரதீப் நெகிழ்ச்சி

‘டிராகன்’ படத்தை இயக்குநர் ஷங்கர் வாழ்த்தியது, கனவிலும் தான் நினைக்காதது என பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சிறு வயதில் இருந்தே ஷங்கரின் படங்களை பிரமிப்புடன் பார்த்து வளர்ந்தவன் என்றும், அவரை போற்றும் ரசிகனாக இருந்ததையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், தனது உணர்வுகளை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது கடினம் என கூறி நன்றி தெரிவித்துள்ளார்.
Similar News
News February 24, 2025
ஈஷாவில் சிவராத்திரி விழாவுக்கு அனுமதி

ஈஷா யோகா மைய சிவராத்திரிக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுத்துள்ளது. கழிவுநீர் மேலாண்மையை பின்பற்றவும், ஒலி மாசுவை தவிர்க்கவும் ஈஷாவுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்தது. இதனை பரிசீலித்த ஐகோர்ட் மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது அரசின் கடமை என்றும், மனுவை ஏற்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது.
News February 24, 2025
ஜல்லி, மணல் 100% விலை உயர்வு: BAI தலைவர் தகவல்

தமிழகத்தில் ஜல்லி, மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் ரூ.5,000 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய BAI (பில்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா) தலைவர் விஸ்வநாதன், எம்.சாண்ட் உள்ளிட்டவற்றின் விலை கடந்த வாரத்தில் 100% உயர்ந்துள்ளதாகவும் இதனால் அரசின் கனவு இல்லம் கட்டுமானப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
News February 24, 2025
ஜெர்மன் அதிபராக உள்ள ஃப்ரெட்ரிக் யார்?

ஜெர்மன் அதிபராக (Chancellor) பதவியேற்க உள்ள கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சியின் தலைவர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ், இதுவரை ஒருமுறை கூட அமைச்சர் உள்ளிட்ட எவ்வித அரசு பதவிகளையும் வகித்ததில்லை. கார்ப்பரேட் வழக்கறிஞரும், பெரும் தொழிலதிபருமான அவர், அதிகார மோதல் காரணமாக 2009ஆம் ஆண்டு கட்சியில் இருந்து வெளியேறி, வழக்கறிஞர் பணியைத் தொடர்ந்தார். 1955ல் ஜெர்மனியின் ப்ரிலான் டவுனில் ஒரு நீதிபதியின் மகனாக பிறந்தார்.