News January 2, 2025
₹1000 வேண்டாம், பாதுகாப்புதான் வேண்டும்: Sowmiya

அண்ணா பல்கலை.விவகாரத்தில் போராட்டம் நடத்த முயன்றதால் கைதான சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். இதன்பின் பேசிய செளமியா, மாநிலத்தில் பெண்கள் – குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன; பெண்கள் பயத்துடன் இருப்பதாக குற்றம் சாட்டிய அவர், பெண்களுக்கு அரசு கொடுக்கும் ₹1000 வேண்டாம்; பாதுகாப்புதான் வேண்டும். இதற்காக போராட்டம் நடத்தினால்கூட அரசு கைது செய்கிறது என்றார்.
Similar News
News August 13, 2025
அரிவாளை பார்த்ததும் கவின் ஓடினான்: சுர்ஜித் வாக்குமூலம்

நெல்லையில் கவினை ஆணவப்படுகொலை செய்த சுர்ஜித், அவனது தந்தை சரவணனிடம் தனித்தனியே சிபிசிஐடியினர் விசாரித்தனர். இதன்பின் கொலை நடந்த KTC நகருக்கு சுர்ஜித்தை அவர்கள் அழைத்து சென்றனர். அங்கு, கவினை கொலை செய்ய அரிவாளை எடுத்தபோது, தவறுதலாக கீழே விழுந்ததும், அதை பார்த்தவுடன் கவின் ஓடியதாகவும், பின்னர் துரத்தி சென்று வெட்டியதையும் சுர்ஜித் நடித்து காண்பித்தான். இதனை சிபிசிஐடியினர் வீடியோ பதிவு செய்தனர்.
News August 13, 2025
3வது நாளாக தங்கம் விலை குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை மூன்றாவது நாளாக இன்றும் குறைந்துள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹40 குறைந்து ₹74,320-க்கும், கிராமுக்கு ₹5 குறைந்து ₹9,290-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் ₹560,நேற்று ₹640, இன்று 40 என மொத்தம் மூன்று நாளில் ₹1240 சவரனுக்கு குறைந்துள்ளது.
News August 13, 2025
இந்தியாவை எச்சரித்த பாக்., PM

பாகிஸ்தானுக்கு கிடைக்க வேண்டிய நீரில் ஒரு துளியைக் கூட இந்தியாவால் பறிக்க முடியாது என அந்நாட்டு PM ஷெபாஸ் ஷெரிஃப் தெரிவித்துள்ளார். சிந்து நதி நீரை நிறுத்தி வைத்து மிரட்டினால் இந்தியாவிற்கு தக்க பாடம் புகட்டப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. பாக்., Ex அமைச்சர், ராணுவ தளபதி மிரட்டலை அடுத்து பிரதமரும் எச்சரித்துள்ளார்.