News August 18, 2024
எனக்கு தமிழ் பிடிக்காது: சங்கீதா

தனக்கு தமிழ் பிடிக்கவே பிடிக்காது என நடிகை சங்கீதா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தெலுங்கு தான் பிடிக்கும் என்றும், எத்தனை பேர் கோபப்பட்டாலும் அது பற்றி தனக்கு கவலை இல்லை எனவும் அவர் ஓப்பனாக பேசியுள்ளார். மேலும், தெலுங்கு சினிமாவில் கிடைக்கும் மரியாதை தமிழ் சினிமாவில் கொடுக்க மாட்டார்கள் என கூறியுள்ளார். சங்கீதாவின் இந்த பேச்சை ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.
Similar News
News October 16, 2025
டிரம்ப் சொல்வது முற்றிலும் பொய்: இந்தியா

ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை வாங்கமாட்டேன் என PM மோடி உறுதியளித்ததாக டிரம்ப் கூறியதற்கு வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் கச்சா எண்ணெய் குறைந்த விலையில் கிடைப்பதால், இவ்விவகாரத்தில் இந்தியர்களின் நலனே முக்கியம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. PM மோடி சொல்லாத ஒன்றை சொன்னதாக டிரம்ப் கூறியதால் இருநாடுகளுக்கு இடையேயான நட்பு கேள்விக்குறியாக உள்ளது.
News October 16, 2025
இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு

தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள 8 பேரின் ஜாமின் மனுக்கள் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சற்றுநேரத்தில் தீர்ப்பளிக்கிறது. முதல் குற்றவாளியான நாகேந்திரன் உயிரிழந்த நிலையில், அவரது மகன் அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், சிறையில் உள்ள ராஜேஷ், விஜய், செந்தில் குமார் உள்ளிட்ட 8 பேரின் ஜாமின் மனு மீது இன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது.
News October 16, 2025
கிட்னி திருட்டில் பாரபட்சமின்றி நடவடிக்கை: மா.சு.

கிட்னி திருட்டு புகார்களில் வழக்குப்பதிவு செய்து, பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சு. தெரிவித்துள்ளார். பேரவையில் EPS குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய அவர், ஹாஸ்பிடல்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். திருச்சி சிதார், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் ஹாஸ்பிடல்களில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.