News October 30, 2025

KAS, OPS பயணம் பற்றி எனக்கு தெரியாது: EPS

image

முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை ஒட்டி, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் EPS மரியாதை செய்தார். பின்னர் பேட்டியளித்த அவர், தேவருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை மத்திய உள்துறை அமைச்சரிடம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். KAS, OPS ஒரே காரில் பயணித்தது தொடர்பான கேள்விக்கு, அது பற்றி தனக்கு எதுவும் தெரியவில்லை என்றும், தெரிந்ததும் பதில் அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

Similar News

News November 1, 2025

நாளை உருவாகிறது புதிய புயல் சின்னம்.. மழை அலர்ட்!

image

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால், நவ.6-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘மொன்தா’ புயலாக மாறி ஆந்திராவில் கரையைக் கடந்த நிலையில், வங்கக்கடலில் அடுத்த புயல் சின்னம் உருவாகியுள்ளது.

News November 1, 2025

பெண்களே 30 வயது ஆச்சா? இத கண்டிப்பா செய்யணும்!

image

வேலைக்கு செல்லும் பெண்கள், குடும்பத்தை கவனிக்கும் பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை. அதிலும் 30 வயதுக்கு மேலே உள்ளவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை என்பது வருத்தமான உண்மை. என்ன வேலை இருந்தாலும், ஆரோக்கியம் தான் முதலில் முக்கியம். எனவே 30 வயதானால் பெண்கள் எதையெல்லாம் முக்கியமாக செய்யணும் என்பதை மேலே SWIPE பண்ணி பாருங்க…

News November 1, 2025

BREAKING: பொங்கல் பரிசு அறிவித்தார் அமைச்சர்

image

தைப்பொங்கலை முன்னிட்டு, நவ.15 முதல் இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காந்தி கூறியுள்ளார். அத்துடன், இந்த முறை 15 ரக சேலைகள், 5 ரகங்களில் வேட்டிகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, பொங்கல் பரிசுத்தொகையாக ₹5,000 வழங்கப்படும் என தகவல் வெளியான நிலையில், விரைவில் CM ஸ்டாலின் இதுதொடர்பான மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிடுவார் என <<18160908>>அமைச்சர் சக்கரபாணி<<>> கூறியிருந்தார்.

error: Content is protected !!