News May 4, 2024
என்னிடம் சொந்தமாக சைக்கிள் கூட இல்லை: மோடி

கடந்த 25 ஆண்டுகளில் தன் மீது எந்த ஊழல் கறையும் இல்லை என்றும் தனக்கு சொந்தமாக வீடு, சைக்கிள் கூட இல்லை எனவும் பிரதமர் மோடி பெருமிதம் கூறியுள்ளார். ஜார்கண்டில் பரப்புரை மேற்கொண்ட அவர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பெரும் சொத்துகளை சேர்த்து வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். ஜார்கண்டில் மே 13 முதல் ஜூன் 1 வரை 4 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
Similar News
News January 30, 2026
குழந்தைகளிடம் இதை கண்டுக்காம இருந்துடாதீங்க!

பெற்றோர்களே, உங்கள் குழந்தை ஓவர் சுட்டித்தனமாக, ஹைப்பர் ஆக்டிவாக இருக்கிறார்களா? அவர்களை, மனநல (அ) குழந்தைகள் நல டாக்டரிடம் அழைத்துச் செல்வது நல்லது. மனநல டாக்டரிடம் ஆலோசனை பெறுவதை அவமானமாக நினைக்கவேண்டாம். அது ஒரு சாதாரண விஷயம்தான். எனவே அலட்சியமாக இருந்து உங்கள் குழந்தையின் மனநலத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். விழிப்புணர்வுக்காக அனைவருக்கும் SHARE THIS.
News January 30, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு.. அமைச்சர் ஹேப்பி நியூஸ்

தரமான பொருள்கள் மட்டுமே ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். முறைகேடுகளை தடுக்கும் வகையில் ரேஷன் கடைகளுக்கு பொருள்கள் அனுப்புவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 21 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் விரைவில் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
விபத்தில் சிக்கினார் நடிகர் விஜய் சேதுபதி.. HEALTH UPDATE

நடிகர் விஜய் சேதுபதி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பின்போது கையில் காயம் ஏற்பட்டதாகவும், 8 வாரங்கள் ஓய்வில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் நேற்று <<18999720>>VJS <<>>கூறியிருந்தார். இந்நிலையில், அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குணமடைய வேண்டும் எனவும் ரசிகர்கள் SM-ல் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.


