News April 8, 2024

நான் எந்த கட்சியிலும் இல்லை

image

நான் எந்த கட்சியிலும் இல்லை, தேர்தலில் போட்டியிடவும் இல்லை என நடிகர் சஞ்சய் தத் விளக்கமளித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் ஹரியானாவின் கர்னால் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சஞ்சய் தத் போட்டியிடுவார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், “நான் அரசியலுக்கு வர முடிவு எடுத்தால், நிச்சயம் அதை அறிவிப்பேன். என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம்” என தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Similar News

News March 23, 2026

EPS மீது கிருஷ்ணசாமி அதிருப்தி!

image

அதிமுக கூட்டணியில் பாஜக, அமமுக, பாமக கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதியாகிவிட்டது. இந்நிலையில் GK வாசனை அடுத்து கிருஷ்ணசாமியும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். EPS உடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தி விட்டதாகவும், தொகுதியை இறுதி செய்தால் தான் கூட்டணி முடிவை அறிவிக்க முடியும் எனவும் கூறியுள்ளார். 4 முனை போட்டியுள்ள நிலையில், யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்போம் என அவர் முன்பே கூறியிருந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 5 சீட் ஒதுக்கீடு

image

கடும் இழுபறிக்கு பிறகு திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திமுக கூட்டணியில் அக்கட்சிக்கு 5 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தது 6 சீட்களை பெறவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுதியாக இருந்த போதிலும், கடந்த தேர்தலை காட்டிலும் ஒரு சீட் குறைவாகவே திமுக ஒதுக்கியுள்ளது. 2021-ல் கந்தர்வகோட்டை, கீழ்வேளூரில் CPM வென்றிருந்தது.

error: Content is protected !!