News February 16, 2025
பிச்சை கேட்கவில்லை: அன்பில் மகேஷ்

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாமல், அந்த நிதியை TNக்கு தரமாட்டோம் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். இதற்கு காட்டமாக பதிலளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், எம்மிடமிருந்து பறித்துக் கொண்டதை கேட்கிறோம்; பிச்சையல்ல என X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல. இழந்ததை கேட்கிறோம் இரவல் பொருளல்ல என, Ex CM அண்ணா கூறியதையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
Similar News
News December 19, 2025
பார்லிமென்டில் நிறைவேறிய முக்கிய மசோதாக்கள்!

குளிர்கால கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. அதில் 8 முக்கிய மசோதாக்கள் நிறைவேறின. *மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்ட ‘விக்சித் பாரத் G RAM G’ மசோதா *காப்பீட்டு துறையில் FDI முதலீட்டை 100% ஆக உயர்த்துவதற்கான ‘சப்கா பீமா சப்கி ரக்ஷா’ மசோதா, *பான் மசாலா, புகையிலை மீது சிறப்பு வரி விதிக்கும் செஸ் மசோதா, *அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கும் ‘ஷாந்தி’, ஆகியவை நிறைவேறின.
News December 19, 2025
BREAKING: இந்திய அணி பீல்டிங்

இலங்கைக்கு எதிரான U-19 ஆசிய கோப்பை அரையிறுதி போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. துபாயில் தொடர்ந்து மழை பெய்த நிலையில், 5 மணிநேரம் தாமதம் ஏற்பட்டதால் போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. மீண்டும் மழை பெய்தால், குரூப் ஸ்டேஜில் முதலிடம் பிடித்ததன் அடிப்படையில் இந்தியா நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். வலுவாக உள்ள IND அணியை, SL அணி வீழ்த்துவது சற்று கடினமே.
News December 19, 2025
சிங்கம் IS BACK.. வைரல் போட்டோ!

‘ஆவேசம்’ ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்த விஷயமே. இப்படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து காக்கி உடையில் சூர்யா கம்பீரமாக இருக்கும் போட்டோ சோஷியல் மீடியாவை அதிரவைத்துள்ளது. சூர்யா போலீஸ் கேரக்டரில் நடித்த படங்கள் பட்டையை கிளப்பிய நிலையில், இப்படமும் பெரிய வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


