News October 12, 2025
கூட்டணிக்காக விஜய்யிடம் பேசவில்லை: திருநாவுக்கரசர்

அரசியலில் முதல் முறையாக களமிறங்கும் விஜய்க்கு தேர்தல் நேரத்தில் மக்களின் முடிவு பக்குவத்தை ஏற்படுத்தும் என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். கரூர் விவகாரத்தில் விஜய்யுடன் ராகுல் காந்தி பேசியது கூட்டணிக்காக அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளதாகவும் அதில் எந்தவிதமான குழப்பமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
Similar News
News March 26, 2026
டிடிவி தினகரனின் வலதுகரம் திமுகவில் இணைந்தார்

TTV தினகரனின் வலதுகரமாக திகழ்ந்த அமமுக துணை பொதுச்செயலாளர் தஞ்சாவூர் ரெங்கசாமி திமுகவில் இணைந்துள்ளார். NDAவில் அமமுகவுக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்படவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்த அவர், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமாகியுள்ளார். அமமுகவின் டெல்டா முகமாக விளங்கிய அவரது விலகல், TTV தினகரனுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.
News March 26, 2026
குடிகாரர்களின் வாக்கு வேண்டாம்: சீமான்

சேலம், வாழப்பாடியில் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, குடிப்பவர்களின் வாக்கு வேண்டாம்; குடிமக்களின் வாக்கு வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 2 கோடி குடிகாரர்களின் வாக்கு போய்விடும் என்பதால், தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக் மூடப்படும் என அறிவிப்பதில்லை; ஆனால், நான் ஆட்சிக்கு வந்த உடனே டாஸ்மாக்-ஐ மூடுவேன் என உத்தரவாதம் அளித்தார். <<-se>>#TNElection2026<<>>