News August 20, 2025
அப்பாவை அசைக்க முடியாது: ஸ்ருதி உறுதி

‘தக் லைஃப்’ தோல்வி கமல்ஹாசனை பாதிக்கவில்லை என அவரது மகள் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். சினிமாவில் வெற்றி, தோல்வி என தனது தந்தை நிறைய பார்த்தவர் எனவும், சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை மீண்டும் சினிமாவில்தான் போடுவதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால், இந்த நம்பர் கேம் ஒருபோதும் தந்தையை பாதிக்காது என தெரிவித்துள்ளார். ‘இந்தியன் 2’, ‘தக் லைஃப்’ என கமலின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன.
Similar News
News January 17, 2026
அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகள் (PHOTOS)

சட்டப்பேரவை தேர்தலுக்காக 5 முக்கிய வாக்குறுதிகளை EPS அறிவித்துள்ளார். *ரேஷன் அட்டை உள்ள அனைத்து குடும்பத் தலைவிக்கும் மாதம் ₹2,000 உதவித்தொகை. *ஆண்களுக்கும், மகளிரைப் போலவே டவுன் பஸ்களில் இலவச பயணம். *அம்மா இல்லம் திட்டத்தின் கீழ் கிராமங்கள், நகரங்களில் வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீடு. *100 நாள்கள் வேலைத் திட்டம் 150 நாள்களாக மாற்றப்படும். *5 லட்சம் மகளிருக்கு ₹25,000 மானியத்தில் ஸ்கூட்டர்.
News January 17, 2026
அண்ணாமலைக்கு புதிய பதவியா?

பாஜகவில் நயினாரும், அண்ணாமலையும் எதிரும் புதிருமாக இருந்து வந்தது டெல்லி தலைமையை அப்செட் செய்திருந்தது. இதனால், அவர்களை அழைத்து மத்தியஸ்தம் செய்திருக்கிறது டெல்லி பாஜக. இதனால் அண்ணாமலையும் சற்றே அனுசரித்து போக, அவருக்கு புதிய பதவி ஒன்றை கொடுக்க டெல்லி பாஜக திட்டமிட்டுள்ளதாம். அத்துடன் தேர்தல் களத்தில் பிரசார பீரங்கியாகவும் அண்ணாமலையை பயன்படுத்த பாஜக தரப்பில் திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
News January 17, 2026
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை: CM ஸ்டாலின்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்ட CM ஸ்டாலின், 2 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். *ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி, முதல் பரிசு பெறும் மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத்துறையில் அரசு வேலை. *அலங்காநல்லூரில் ₹2 கோடி செலவில் ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் & உயர்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


