News September 21, 2025
முதல்முறை குடிச்சப்போ முடியல: பாபநாசம் நடிகை

தான் முதல்முறையாக மது அருந்தியபோது தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை என்று நடிகை எஸ்தர் அனில் கூறியுள்ளார். ‘பாபநாசம்’ படத்தில் கமலின் இளைய மகளாக நடித்த இவரை, கடைசியாக ‘மின்மினி’ படத்தில் பார்க்க முடிந்தது. இந்நிலையில், தனது மது பழக்கம் குறித்து மனம் திறந்த அவர், முதல்முறை குடித்துவிட்டு வீடு திரும்பியதும் ஒரு நாள் முழுவதும் தூங்கியதாகவும், அதன்பின் குடியை விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 21, 2025
தனுஷால் மீண்டும் ஹாட் டாபிக்கான ஆன்லைன் ரிவ்யூஸ்

9 மணிக்கு ரிலீஸாகும் படத்திற்கு 8 மணிக்கே வரும் ரீவ்யூவை பார்க்காதீர்கள், படத்தை பார்த்துவிட்டு நீங்களே (ரசிகர்கள்) வெற்றியை தீர்மானியுங்கள் என ‘இட்லி கடை’ பட விழாவில் தனுஷ் கூறியுள்ளார். திரைப்படங்கள் வெளியாகி 3 நாட்களுக்கு ஆன்லைன் விமர்சனம் செய்ய தடைவிதிக்க வேண்டும் என்று கோர்ட் படியேறியும், ‘கருத்து சுதந்திரம்’ என கூறி மறுக்கப்பட்டது. படங்களின் உடனடி ரிவ்யூ குறித்த உங்கள் கருத்து என்ன?
News September 21, 2025
மதிய நேர குட்டி தூக்கத்தால் இவ்வளவு நன்மைகளா?

சண்டே மதியம் வந்துருச்சி, சிக்கனும் சாப்டாச்சு, லைட்டா கண்ணு சொக்குது, அப்டியே குட்டி தூக்கத்த போட கிளம்பிட்டீங்களா? இந்த தூக்கத்தால் பல நன்மைகள் உள்ளன. நினைவாற்றல், கற்றல் திறன் அதிகரிக்கிறது. மன அழுத்தம் குறைவதோடு சிக்கலை நிதானமாக கையாளவும் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கவும் இந்த மதிய தூக்கம் உதவுகிறது. அதேநேரம், தொடர்ந்து மதியம் தூங்கினால் சோம்பேறித்தனம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
News September 21, 2025
திருத்தப்பட்ட H-1B விசா விதிகள்.. முழு தகவல்கள்

✦திருப்பத்தப்பட்ட H-1B விசா விதிகள் வரும் செப்.21-ம் தேதிக்கு பின்னர் விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்
✦கம்பெனிகள் விசாவுக்காக ₹88 லட்சம் கட்ட வேண்டும். (இது ஆண்டுதோறும் அல்ல, ஒருமுறை மட்டுமே)
✦தற்போது H-1B விசா வைத்திருப்பவர்கள் இந்த விதிக்கு உட்பட மாட்டார்கள்
✦ஏற்கெனவே, H-1B வைத்திருப்பவர்கள் Renew செய்யும்போது, பழைய முறையிலேயே நடக்கும்.