News December 19, 2024
இனி உங்களை ஏமாற்ற முடியாது..!

யூடியூபில் சில வீடியோக்களின் டைட்டில் செமையாக இருக்கும், ஆனால் அதை க்ளிக் செய்தால், டைட்டிலுக்கு சம்பந்தமே இல்லாமல் வீடியோ ஓடிக்கொண்டிருப்பதை நாம் பலமுறை பார்த்திருப்போம். இப்படி செயல்படும் இந்திய கன்டெண்ட் கிரியேட்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க யூடியூப் முடிவு செய்துள்ளது. இதுபோன்ற Clickbait வீடியோக்களை நீக்க திட்டமிட்டுள்ளது. இருப்பினும் Strike கொடுக்காது எனவும் உறுதியளித்துள்ளது.
Similar News
News March 4, 2026
‘கேரளா ஸ்டோரி 2’ TN அரசுக்கு சீமான் எச்சரிக்கை

இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ‘கேரளா ஸ்டோரி 2’ படத்திற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படத்தை TN-ல் திரையிட திமுக அரசு அனுமதித்தது வெட்கக்கேடானது என்றும், உடனடியாக தடைசெய்ய தவறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் சீமான் எச்சரித்துள்ளார். இதுபோன்ற படங்கள் மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி நாட்டின் ஒருமைப்பாட்டை சிதைக்கும் உள்நோக்கமுடையது எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 4, 2026
தவெகவின் தேர்தல் அறிக்கையில் இலவசங்களா?

விஜய் அமைத்த அருண்ராஜ் தலைமையிலான குழு, தவெகவின் தேர்தல் அறிக்கையை தயாரித்துவிட்டதாக கூறப்படுகிறது. வரும் 8-ம் தேதி முதற்கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதில், இளைஞர்கள், பெண்களை கவரும் வகையில் 10 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளதாம். அதுபோல, முழு அறிக்கையில் பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், இணைய சேவை உள்ளிட்ட வாக்குறுதிகள் உள்ளதாக TVK வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News March 4, 2026
இன்று பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறையாகும். அதேபோல், திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயில் விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 9-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்ய மார்ச் 14 வேலைநாளாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.


