News April 4, 2024

என்னை விலைக்கு வாங்க முடியாது

image

தன்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு பாஜகவிடம் வசதி கிடையாது என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவில் இணையப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் உலா வந்தது. இதற்கு X பக்கத்தில் பதிலளித்துள்ள அவர், தன்னை விலைக்கு வாங்க முயற்சித்தால் அது அவர்களால் முடியாது என்பதை உணர்வார்கள் எனக் கூறியுள்ளார். பிரகாஷ் ராஜின் இந்த X பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Similar News

News February 2, 2026

ஜிஎஸ்டி வசூல் ₹1.93 லட்சம் கோடி

image

கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் மொத்த ஜிஎஸ்டி ₹1.93 லட்சம் கோடி வசூல் ஆகியுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2025 ஆண்டு ஜனவரி மாதம் ₹1.84 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் இந்தாண்டு 6.2% அதிகரித்துள்ளது. இதில் உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் ₹1.41 லட்சம் கோடி என்றும், தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் 5% உயர்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 2, 2026

ஏமாற்றமளிக்கும் மத்திய பட்ஜெட்: திருமாவளவன்

image

FM தாக்கல் செய்த மத்திய பட்ஜெட், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுப்பதற்கு பதில் வீழ்ச்சிக்கே இட்டுச் செல்லும் என திருமா கூறியுள்ளார். பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவொரு பெரிய திட்டமும் இல்லை என சாடியுள்ள அவர், தனிநபர் வருமான வரியில் எந்தச் சலுகையும் இல்லை என்றும் தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பட்ஜெட் TN-ஐ மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

News February 2, 2026

பட்ஜெட் அறிவிப்பில் சற்று ஏமாற்றம்: டிடிவி

image

வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை எளிதில் எட்டிப்பிடிக்க மத்திய பட்ஜெட் உதவும் என TTV கூறியுள்ளார். அதிவேக ரயில் வழித்தடங்கள், பொதிகை மலையில் மலையேற்றத்தை ஊக்குவிக்க திட்டம் உள்ளிட்டவற்றை வரவேற்பதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். எனினும் தமிழக மக்கள் எதிர்பார்த்த மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள், IIT கல்வி நிறுவனங்கள் போன்ற முக்கிய அறிவிப்புகள் இல்லாதது சற்று ஏமாற்றத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!