News November 1, 2024
எல்லை போராட்ட தியாகிகளை வணங்குகிறேன்: CM ஸ்டாலின்
தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றுவதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், தெற்கிலும் வடக்கிலும் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள் இன்று எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக போராடிய அனைவரையும் வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 19, 2024
3 நாள்களில் தொடங்குகிறது கிரிக்கெட் யுத்தம்
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ‘பார்டர் கவாஸ்கர் டிராஃபி’ (BGT) கிரிக்கெட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி பெர்த் நகரில் தொடங்கவுள்ளது. கடைசி நான்கு BGT தொடர்களையும் இந்தியா வென்றிருப்பதால், இந்த ஆண்டு கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா முழு பலத்துடன் களம் இறங்குகிறது. அதேநேரம், நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வியைத் தொடர்ந்து வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இதில், உங்கள் விருப்ப அணி எது?
News November 19, 2024
புராதன சின்னங்களை காண இன்று இலவச அனுமதி
மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை காண இன்று இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் நவ.19 முதல் 25ஆம் தேதி வரையில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு முதல் நாளான இன்று இந்த சிறப்பு சலுகை வழங்கப்பட இருக்கிறது. அதனால் இன்று மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணம் செலுத்தாமல் புராதன சின்னங்களை பார்வையிடலாம்.
News November 19, 2024
இன்று உலக கழிவறை தினம்
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இன்னும் கழிவறை இல்லாத பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இதனால், அவர்களுக்கு காலரா உள்ளிட்ட பல நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி ’உலக கழிவறை தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில், அனைவருக்கும் கழிவறை வசதி கிடைப்பதை உறுதி செய்ய உறுதிமொழி ஏற்போம்.