News April 2, 2024
முதல் விருதை ரூ.25 லட்சத்திற்கு ஏலம் விட்டேன்

தனக்குக் கிடைத்த விருதை ஏலத்தில் விட்டதாக நடிகர் விஜய் தேவரகொண்டா சொன்ன விஷயம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “முதல் முறையாக சிறந்த நடிகருக்காக கிடைத்த பிலிம்பேர் விருதை ஏலம் விட்டோம். அதை ரூ. 25 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தார்கள். அந்தப் பணத்தைத் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கினேன். விருதுகள் மீது எனக்கு ஆசை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 10, 2026
மகளிருக்கு ₹5,000.. தமிழக மக்களுக்கு HAPPY NEWS

பிஹாரில் சுயதொழில் தொடங்க பெண்களுக்கு ₹10,000 வழங்கிய திட்டம், NDA கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்க பெரிதும் உதவியது. அதே போன்றதொரு திட்டத்தை தமிழகத்திற்கும் அறிவிக்க PM மோடி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை முறியடிக்கும் வகையில், மகளிருக்கு ₹5,000 வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் அறிவிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சுயதொழில் திட்டமாகவோ, கடனுதவி திட்டமாகவோ இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
News February 10, 2026
நீங்க குடிக்கிறது காபிதூளா? களிமண்ணா?

உங்க காபி தூள் கலப்படமானது என டவுட்டா? இந்த சிம்பிள் ட்ரிக்ஸை யூஸ் பண்ணி உங்க காபி தூளின் தரத்தை கண்டறியலாம். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் காபி தூளை கலந்து 5 நிமிடங்கள் அப்படியே வைங்க. சுத்தமான காபி தூள் என்றால், டம்ளரின் அடியில் எதுவும் தங்காது. கலப்படமானது என்றால், காபி தூளிலுள்ள களிமண் துகள்கள் அடியில் தங்கிவிடும். அனைவரும் தெரிஞ்சிக்க வேண்டிய செய்தியை அதிகளவில் ஷேர் பண்ணுங்க.
News February 10, 2026
நீண்டகால பேன் தொல்லையால் 12 வயது சிறுமி பலி!

ஒடிசாவின் பூரி நகரில் நீண்டகால பேன் தொல்லை காரணமாக லட்சுமிப்ரியா சாஹூ என்ற 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே பேன் தொல்லையால் சிறுமி அவதிப்பட்டு வந்ததாகவும், பலகட்ட சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் கூறினர். இதற்கிடையே சிறுமியின் மரணம் குறித்து மாவட்ட தலைமை, விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.


