News April 25, 2025
ஒரு முஸ்லிமாக மன்னிப்பு கேட்கிறேன்: நடிகை ஹீனா கான்

பஹல்காம் தாக்குதலுக்கு பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான் ஒரு முஸ்லீமாக அனைத்து இந்தியர்களிடமும் மன்னிப்பு கேட்பதாக பதிவிட்டுள்ளார். இன்ஸ்டாவில் அவர், ‘ஒரு இந்தியராக மனமுடைந்து போயுள்ளேன். இதனை செய்தவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர்கள் மனிதர்களே அல்ல. சிலரால், இந்திய முஸ்லிம்களை அந்நியப்படுத்தி விடாதீர்கள். ஒரு இந்தியராக என் தேசத்துடன் தான் நிற்பேன்’ என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
Similar News
News April 25, 2025
பிடிஆருக்கு செந்தில் பாலாஜி இலாகா? அப்போ அவர்?

தன்னிடம் போதிய அதிகாரமும் இல்லை, தனது துறைக்கு நிதியும் இல்லை என பேரவையிலேயே பேசினார் அமைச்சர் பிடிஆர். இதனால் அதிருப்தியில் உள்ள திமுக தலைமை, செந்தில் பாலாஜி வசம் உள்ள மின்சாரம், மதுவிலக்கு துறையை பிடிஆருக்கு கூடுதல் இலாகாவாக அளிக்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, <<16197163>>SC-ன்<<>> கிடுக்குப்பிடியால் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 25, 2025
PAK பிடியில் உள்ள இந்திய வீரர்தான் துருப்புச்சீட்டா?

பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பிகே சிங்கை, அந்நாடு ஒப்படைக்க மறுத்து வருகிறது. இன்று நடந்த கொடி கூட்டத்திற்கு சிங் வரவில்லை. தவறுதலாக எல்லை தாண்டி வந்ததாக அவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை தங்களது பிரச்சாரத்திற்கு பாகிஸ்தான் அரசு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், அவரை வைத்து இந்தியாவிடம் டீல் பேசலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
News April 25, 2025
பங்குச்சந்தையில் ₹8 லட்சம் கோடி நஷ்டம்

பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கலாம் என்ற பதற்றம் நிலவுவதால், பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை கண்டுள்ளன. இன்றைய வர்த்தக நேர முடிவில், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 207 புள்ளிகள் சரிந்து 24,039 புள்ளிகளில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 588 புள்ளிகளை இழந்தது. இன்று ஒரே நாளில் மட்டும், முதலீட்டாளர்கள் சுமார் ₹8 லட்சம் கோடி வரை இழந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.