News May 7, 2025
நான்தான் ஒரிஜினல் ஓனர்… இருட்டுக்கடை ட்விஸ்ட்

இருட்டுக்கடை அல்வா உலக ஃபேமஸ்; ஆனால் அதைவிட ஃபேமஸாகிக் கொண்டிருக்கிறது கடைக்காக தொடரும் வாரிசு சண்டை. கிருஷ்ண சிங்கின் மகள் கவிதா சிங் என்பவர் கடையை நடத்திவரும் நிலையில், அவரது சகோதரர் நயன் சிங்கும் உரிமைகோரினார். இப்போது, கிருஷ்ண சிங்கின் சகோதரர் பேரன் பிரேன் சிங் நான்தான் ஓனர் என்றும் கவிதாவும் நயனும் ஊழியர்கள் என்று புதிய ட்விஸ்ட் வைத்துள்ளார். இன்னும் எத்தனை பேர் கிளம்பி வரப்போறாங்களோ..
Similar News
News December 3, 2025
ATM கார்டில் உள்ள இந்த 16 எண்கள் அர்த்தம் தெரியுமா?

✦ATM கார்டில் உள்ள முதல் எண், அதை வழங்கும் தொழில்துறையுடன் தொடர்பு கொண்டது. அதாவது, பேங்கிங், பெட்ரோலியம், ஏர்லைன் இவற்றில் எது என்பதை குறிக்கும் ✦அடுத்த 5 எண்கள், கம்பெனியை குறிக்கிறது. VISA, Mastercard, Maestro போன்றவை ✦7-15 வரையான நம்பர்கள், பேங்க் அக்கவுண்ட்டுடன் தொடர்புடையது. ஆனால், அக்கவுண்ட் நம்பரும் இதுவும் ஒன்றாக இருக்காது ✦கடைசி நம்பர் Luhn algorithm முறையில் கம்ப்யூட்டரில் உருவாவது.
News December 3, 2025
BREAKING: மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை

கனமழை எதிரொலியாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு கருதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம் புதுச்சேரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News December 3, 2025
BREAKING: விடுமுறை அறிவித்தார் கலெக்டர்

கனமழை எதிரொலியாக மேலும் ஒரு மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, புதுச்சேரிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, குமரி, தி.மலை மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


